ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளா நியமிக்கப்பட்டு உள்ளார். இம்மாநிலத்தில் கடந்த 2014 மற்றும் 2019ஆம் தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
அக்கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வோ அல்லது ஒரு எம்.பி.யோ கூட கிடையாது. இந்த நிலையில் கட்சியை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பினை ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளா ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் மூத்தத் தலைவர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. ஒய்.எஸ். ஷர்மிளாவின் விரைவான உயர்வு சிலருக்கு பிடிக்கவில்லை.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஒருவர், “கட்சியில் இளம் தலைவர் ஒருவர் இருப்பது நல்லது. மேலும் அவர் ஒய்.எஸ்.ஆரின் மகள். ஆனால் அவருக்கு மற்ற கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்குமா என்பது பெரிய கேள்வி” எனக் கூறினார்.
தற்போது ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா, மகன் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அவர் முறைப்படி இன்னமும் கட்சித் தலைவர் பதவியை ஏற்கவில்லை.
ஆந்திர காங்கிரஸின் முன்னாள் தலைவர் சாகே சைலஜாநாத், “ஒய்.எஸ் ஷர்மிளா அனைத்து தரப்பு மக்களையும் திருணத்துக்கு வரவேற்கிறார்.
இதனால் காங்கிரஸில் மாற்றம் வருமா? என்பது தெரியாது. ஆனால் காங்கிரஸின் வாக்கு வங்கி 2-3 சதவீதம் உயர வாய்ப்புள்ளது. எனினும் வெற்றி என்ற நம்பிக்கை வெகு தொலைவில் உள்ளது” என்றார்.
தொடர்ந்து, “குறைந்த பட்சம், காங்கிரஸைப் பற்றி இப்போது ஒரு சலசலப்பு உள்ளது, மற்றபடி மாநிலத்தில் யாரும் அதைப் பற்றி பேசவில்லை” என்றார்.
முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜிவி ஹர்ஷ குமார், “அவர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர். அவர் அங்கு ஒரு அரசியல் தலைவராக தோல்வியடைந்தார். அவர் இங்கே என்ன செய்ய முடியும்? அவரது பதவி உயர்வுக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவருக்கு ஆந்திராவில் இடமில்லை” என்றார்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர், “காங்கிரஸ் தலைவர்களின் மிகப்பெரிய நம்பிக்கை என்னவென்றால், ஷர்மிளா மாநில காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்குவதன் மூலம், அவர்கள் முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆரின் அரசியல் பாரம்பரியத்திற்கு உரிமை கோர முடியும்.
ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒரே வாரிசுரிமையைப் பறிக்க முடியும்” என்றார்.
முதல்வராக ஐந்து ஆண்டுகளில், ஜெகன் தனது அரசாங்கத்தின் அனைத்து நலத் திட்டங்களுக்கும் தனது தந்தையின் பெயரை சூட்டுகிறார்.
இதன்மூலம் மூலம் ஒய்.எஸ்.ஆரின் பாரம்பரியத்தின் மீதான தனது பிடியை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், அடுத்த வாரம் காங்கிரஸ் தலைமையகத்திற்கு செல்ல உள்ள ஷர்மிளா, தனது மகனின் திருமண விழாக்கள் தனது அரசியல் வலிமையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறார்.
இந்தத் திருமண விழா பிப்.24ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதில் விருந்தினர் பட்டியலில் சகோதரர் ஜெகன் உட்பட தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் உள்ளனர்.
இது தவிர, . என் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ஏ ரேவந்த் ரெட்டி மற்றும் துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா, தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே சந்திரசேகர ராவ்; முன்னாள் பிஆர்எஸ் அமைச்சர் டி ஹரிஷ் ராவ், காங்கிரஸ் எம்எல்ஏ ஜி விவேகானந்த், தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா முன்னாள் பாஜக எம்எல்ஏ எட்டலா ராஜேந்தர், காங்கிரஸ் எம்எல்ஏ பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, காந்தி குடும்பத்தினர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் உள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜெகனுடனான அதிகார மோதலில் மகளின் பக்கம் அவர்களின் தாயார் தாய் ஒய் எஸ் விஜயலட்சுமி உள்ளார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Andhra Congress stirs buzz with Sharmila as chief, but party leaders fear not enough
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“