தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா மரணம்!

இன்று காலையில், ரோசய்யாவின் நாடித் துடிப்பு குறைந்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தமிழக முன்னாள் கவர்னரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கொனிச்செட்டி ரோசய்யா உடலநலக்குறைவால் தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். அக்கட்சியின் மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

மாநில சட்ட மேலவையில் நீண்ட காலம் பணியாற்றிய ரோசய்யா, முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்குப் பிறகு செப்டம்பர் 3, 2009 அன்று பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 24, 2010 வரை அவர் முதலமைச்சராகத் தொடர்ந்தார். பின்னர் சொந்தக் காரணங்களுக்காக 2010 நவம்பர் 24 அன்று முதல்வர் பதவியிலிருந்து பதவி விலகினார்.

2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் கவர்னராக பணியாற்றினார். பின்னர் வயதுமூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரோசய்யா அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில் இன்று காலையில், ரோசய்யாவின் நாடித் துடிப்பு குறைந்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடலை தரம் கரன் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு மாற்ற அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டூர் மாவட்டம் வெமுருவில் ஜூலை 4, 1933 இல் பிறந்த ரோசய்யா, 1968 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டப் பேரவையில் நுழைந்தார். அவர் 1980 வரை எம்எல்ஏயாக தொடர்ந்தார். மரி சென்னா ரெட்டியின் ஆட்சியின் போது, ​​சாலை மற்றும் கட்டிடங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றினார். 2004-09 இல், அவர் சிராலா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருங்கிணைந்த ஆந்திர சட்டசபையில் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், ரோசய்யாவை இழந்த வாடும் அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Andhra former cm rosaiah passes away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com