Advertisment

எதிர்க்கட்சிகள் மீது ஆந்திர அரசு மெகா அடக்குமுறை: ஒரு வாரத்தில் 680 நோட்டீஸ்... 147 வழக்கு; சமூக ஊடகப் பதிவிட்ட 49 பேர் கைது

ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர் ஜெகன் கூறுகையில், “சமூக ஊடக ஆர்வலர்களை அரசு துன்புறுத்தல், சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் அச்சுறுத்தல்களால் குறிவைக்கிறது” என்று கூறினார்.; அவர்கள் ஒரு எல்லையைத் தாண்டிவிட்டார்கள் என்று தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
yscr-arrest

(இடமிருந்து வலம்) வர்ரா ரவீந்தர் ரெட்டி, இந்தூரி ரவி கிரண், கல்லம் ஹரிகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய ஒய்.எஸ்.ஆர்.சி.பி சமூக ஊடக ஆர்வலர்கள் ஆவர்.

ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான என்.டி.ஏ அரசாங்கம், சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகள் மீது பெரிய அளவில்ஒடுக்குமுறையைத் தொடங்கியுள்ளது. அவர்கள் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களின் "மனைவிகள் மற்றும் மகள்கள்" பற்றி இழிவான உள்ளடக்கத்தை வெளியிட்டதன் மூலம் "வரம்பு மீரிவிட்டதாகக்" கூறினர். . நவம்பர் 6 மற்றும் 12-ம் தேதிக்கு இடையில், மாநில காவல்துறை 680 நோட்டீஸ்களை அளித்துள்ளது, 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 49 பேரை கைது செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Andhra govt’s mega crackdown on opposition: 680 notices, 147 cases, 49 arrests over social media posts in a week


அவர்களில் பெரும்பாலோர் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல், அவதூறு, பொதுவில் பிரச்னையை உருவாக்குதல், குற்றவியல் சதி மற்றும் ஐடி சட்டப் பிரிவுகளின் கீழ் படங்களை மார்பிங் செய்தல் மற்றும் இழிவான உள்ளடக்கத்தை படிவிடுதல் தொடர்பான பி.என்.எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சர் வி. அனிதா, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ-வும், நடிகருமான என். பாலகிருஷ்ணாவின் மனைவி வசுந்தரா, முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவின் மனைவி, துணை முதல்வர் மற்றும் ஜனசேனா கட்சித் தலைவர் கே. பவன் கல்யாண் மகள்கள், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, அவரது தாயார் ஒய்.எஸ். விஜயம்மா செல்வாக்கு மிக்க பெண்களைக் குறிவைத்ததாகக் கூறப்படும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆர்வலர்கள் மற்றும் அனுதாபிகளின் சமூக ஊடகப் பதிவுகளை பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்துறையினர் தோண்டித் துருவியதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

வர்ரா ரவீந்தர் ரெட்டி, இந்தூரி ரவி கிரண், கல்லம் ஹரிகிருஷ்ணா ரெட்டி, பெத்திரெட்டி சுதா ராணி மற்றும் மேகா வெங்கட் ராமி ரெட்டி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய ஒய்.எஸ்.ஆர்.சி.பி சமூக ஊடக ஆர்வலர்கள். “ரவீந்தர் ரெட்டி கடப்பா மாவட்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அவர்களின் சமூக ஊடகங்களைக் கையாளுகிறார்.  “அவர் ஆன்லைனில் அவதூறான உள்ளடக்கத்தை பரப்பி, சமூகங்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துகிறார்” என்று கர்னூல் சரக டி.ஐ.ஜி கோயா பிரவீன் ரவீந்தர் ரெட்டி கைது குறித்துக் கூறினார்.  “அவர் அரசியல் தலைவர்களின் படங்களை மார்பிங் செய்துள்ளார்,  பல்வேறு சமூகத்தினரிடையே அமைதியின்மையைத் தூண்டும் உள்ளடக்கத்தை பதிவிட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் பிரிவினையை ஊக்குவிக்கும் விதமாகவும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகவும் உள்ளது. பெண் தலைவர்களுக்கு எதிராக மோசமான உள்ளடக்கம் மூலம் அவர்களை குறிவைக்கும் டஜன் கணக்கான யூடியூப் சேனல்களை அவர் நிர்வகிக்கிறார்.” என்று கூறினார்.

தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனம் வெங்கட ரமண ரெட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களின் கேலிச் சித்திரங்கள் அல்லது கேலிச்சித்திரங்களை பதிவிடுவது நல்லது, ஆனால், அவர்களின் குடும்பப் பெண்களைக் குறிவைத்து மோசமான மற்றும் வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தை பதிவிடுவது வரம்பு மீறிய செயல். ஐந்து மாதங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்ததும், பழிவாங்கும் அரசியலை செய்ய வேண்டாம் என்று மூத்த தலைமை முடிவு செய்து, இந்த சமூக ஊடக ஆர்வலர்களையும் அவர்களின் இழிவான பதிவுகளையும் புறக்கணித்தது. எனினும், பாடம் கற்பதற்குப் பதிலாக, போர்க்குணமிக்கவர்களாக மாறிவிட்டனர். இந்த மோசமான சமூக ஊடகப் போருக்கு மனைவிகள் மற்றும் மகள்கள் உட்பட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களின் குடும்ப பெண் உறுப்பினர்களை ஏன் இழுக்க வேண்டும்? ஒய்.எஸ். ஷர்மிளாவையும், ஒய்.எஸ். விஜயம்மாவையும்கூட விட்டு வைக்கவில்லை. அவர்களின் சமூக ஊடகப் பதிவுகள், உள்துறை அமைச்சர் வி. அனிதா போன்றவர்கள் மீதான பாலியல் அநாகரிகமான கருத்துக்களாக சிதைந்துள்ளன. இது அனைத்தும் விதிகளை மீறியதாக உள்ளது. மேலும், இந்த ஒடுக்குமுறை அவர்களின் சொந்த செயல். உண்மையில், மக்கள் சலிப்படைந்து காவல்துறையில் புகார் அளிக்கின்றனர்” என்று ஆனம் வெங்கட ரமண ரெட்டி கூறினார்.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இந்த கைதுகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாகக் கூறினார். “அரசாங்கம் சமூக ஊடக ஆர்வலர்களை துன்புறுத்தல், சட்டவிரோத தடுப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் குறிவைக்கிறது, பேச்சு சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமையை நேரடியாகத் தாக்குகிறது. இந்த குரல்களை நசுக்குவதன் மூலம், அரசாங்கம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இந்த அதிகார துஷ்பிரயோகம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதைவிட அரசியல் பழிவாங்கலில் கவனம் செலுத்துவதை காட்டுகிறது” என்று கூறினார்.

சமீபத்தில் உள்துறை அமைச்சர் தனது வேலையைச் செய்யவில்லை என்று விமர்சித்த பவன் கல்யாண் வெளிப்படுத்திய சீற்றத்திற்கு மத்தியில் சமூக ஊடகப் பதிவுகள் மீதான ஒடுக்குமுறை வந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment