நசுக்கப்படும் ஆந்திர பத்திரிக்கையாளர்கள் - எஃப்.ஐ.ஆரில் அடிபடும் 4 ஒய்எஸ்ஆர் எம்.எல்.ஏ க்கள்

ஏற்கனவே, தனது உயிருக்கு ஆபத்து என்று போலீசில் புகாரும் கொடுத்திடுந்தார், என்று  மறைந்த நிருபரின் சகோதரர்  கே. கோபாலகிருஷ்ணா தெரிவித்தார்.

ஏற்கனவே, தனது உயிருக்கு ஆபத்து என்று போலீசில் புகாரும் கொடுத்திடுந்தார், என்று  மறைந்த நிருபரின் சகோதரர்  கே. கோபாலகிருஷ்ணா தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக விவசாயிகள்? அமராவதியில் 144 தடை உத்தரவு!

YSRCP MLA  named in 4 FIRs : கடந்த அக்டோபர் 15 ம் தேதி, ஆந்திர ஜோதி செய்தித்தாளின் நிருபர் மாலை நேரத்தில்  வீட்டிற்கு செல்லும் போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் . மூன்று நாட்களுக்குப் பிறகு, ஒய்எஸ்ஆர்சிபி எம்.எல்.ஏ மற்றும் சட்டமன்றத்தில் கட்சியின் தலைமை விப் பதவியில் இருக்கும்  ராமலிங்கேஸ்வர ராவ் தாதிசெட்டி எதிராக போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

Advertisment

நிருபரின் கொலை நம் கண்முன் மறைவதற்கு முன்பே, மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் பெர்னி வெங்கடராமையா - அச்சு, மின்னணு, சமூக ஊடகங்களில் தோன்றும் தகவல்களை உண்மையா? பொய்யா ? என்று மதிப்பீடு செய்யவும், அவதூறு பரப்பும் ஊடங்கங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் அதிகாரத்தை  துறைசார்ந்த செயலாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை, ஆந்திர   அமைச்சரவைக்கு சமர்பித்தார்.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிரிக்கப்படாத ஆந்திராவின் முதல்வராக இருந்தபோது 2007 இல் வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவை (ஜிஓ) செயல்படுத்தும் விதமாக அமைச்சரின் திட்டம் உள்ளது . முதலமைச்சர் அலுவலக அதிகாரி இது குறித்து தெரிவிக்கையில், " பெர்னி வெங்கடராமையாவின் திட்டத்தை அமைச்சரவை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் , ஆந்திர அரசாங்கம் பத்திரிக்கையாளர்களையும்,  பத்திரிக்கை சுதந்திரத்தையும் மதிக்கின்றது " என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆக்ஸ்ட் மாதம் தொடங்கி,  ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ க்கள் குறைந்தது நான்கு வழக்கிலாவது  பத்திரிக்கையாளர்களை தாக்கியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

அக்டோபர் 18 , எஃப்.ஐ.ஆர் எண் 288/2019:

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் துனி என்கிற காவல் நிலையத்தில் சத்தியநாராயணனின் சகோதரர், கே.கோபாலகிருஷ்ணா கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டது. அதில், கடந்த இருபது வருடங்களாக ஆந்திர ஜோதி பத்திரிக்கையில்  நிருபராக பணியாற்றி வந்த கத சத்யநாராயணா கடந்த அக்டோபர் 15ம் தேதி மாலை 6 மணியளவில் வீட்டிற்கு செல்லும் போது, எம்.எல்.ஏ தாதிசெட்டி ராஜாவின் ஆதரவின் பேரில் ஐந்து மர்ம நபர்கள் கொலை செய்தனர்" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ தாதிசெட்டிக்கு எதிராக பத்திரிக்கையில் எழுதியாதால்  எனது சகோதரனுக்கும், அந்த எம்எல்ஏ விற்கும் நீண்ட நாளாகவே பதட்டம் இருந்தது. ஏற்கனவே, தனது உயிருக்கு ஆபத்து என்று போலீசில் புகாரும் கொடுத்திடுந்தார், என்று  மறைந்த நிருபரின் சகோதரர் கே.கோபாலகிருஷ்ணா  தெரிவித்தார்.

எம்.எல்.ஏ தாதிசெட்டி இதுகுறித்து தெரிவிக்கையில், எஃப்.ஐ.ஆரில் சொல்லியுள்ள அந்த ஐந்து பேரை நான் கேள்விபட்டதுக் கிடையாது. நிருபர்களுக்கும் எனக்கும் எந்த பகையும் கிடையாது, ஊடகங்கள் கொடுத்த அழுத்தத்தால் மட்டுமே, என் பெயர் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மக்கள் தொடர்பு அமைச்சர் பெர்னி வெங்கடராமையா இது குறித்து தெரிவிக்கையில், ஒய்எஸ்ஆர் கட்சி எம்எல்ஏ க்கள் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இரண்டாவது எஃப்.ஐ.ஆர் :  செப்டம்பர் 23 எண் 133/2019 

தெலுங்கு நாளேடான சூர்யாவின் நிருபர் நாயுடு நாகார்ஜுனா ரெட்டி மீது  25 க்கு மேற்பட்ட கும்பல் ஒய்எஸ்ஆர் எம்எல்ஏ வாக இருக்கும் அமஞ்சி கிருஷ்ணா மோகன் முன்னிலையில்  தாக்கியதாக, பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சின்னகஞ்சம் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது.  

இந்த கொலைவெறித் தாக்குதலால், நாகார்ஜுனா ரெட்டிக்கு ஐந்து எலும்பு முறிவுகள் மற்றும் ஏழு குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனையில் இருக்கும்  நாயுடு நாகார்ஜுனா ரெட்டி இது குறித்து தெரிவிக்கையில், " முந்தைய நாட்களில், எம்.எல்.ஏ வின்  நில அபகரிப்பு, மணல் மாஃபியா போன்றவைகளை நான் எடுத்தக் கூறியிருந்தாலும், சமூக அவலங்களில் போராடி வரும் பத்து வயது குழந்தையை,   முதல்வருக்கு கடிதம் எழுத உதவியதற்காகத் தான், இந்த தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

அந்த பத்து வயது குழந்தையின் தாத்தா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டது அமஞ்சி கிருஷ்ணாவுக்கு பிடிக்கவில்லை. ஊரைவிட்டே இந்த குடும்பத்தை ஒதுக்கி வைத்தார். அவருக்கு பயந்து ஊரில் யாரும் இவர்களிடம் பேசுவது இல்லை. வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இந்த துயரைக்  கண்டதால், அந்த குழந்தை மூலம் முதல்வருக்கு கடிதம் எழுத நான் உதவினேன். தனிப்பட்ட விதமாக நான் காவல் துறையில் புகார் ஒன்றையும் சமர்பித்தேன். அதன் விளைவாகத் தான் இந்த கொலைகாரத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசத்தால் நான் உயிர் தப்பியுள்ளேன்,  என்றார் நிருபர் நாயுடு நாகார்ஜுனா ரெட்டி.

ஆகஸ்ட் 25: எஃப்.ஐ.ஆர் எண் 202/2019

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராயதுர்க் காவல் நிலையத்தில்  இந்த எஃப்.ஐ.ஆர்  பதிவு செய்யப்பட்டது.  ஆகஸ்ட் 25ம் தேதி மதியம், தெலுங்கு மொழி சேனலான மஹாநியூஸின் நிருபர் அவூலா மனோகர், ஸ்டோன் வேலி பள்ளி அருகே ராயதுர்க் நகரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

அவூலா மனோகர், இது குறித்து தெரிவிக்கையில், ஒய்எஸ்ஆர் எம்எல்ஏ வான - கபு ராமச்சந்திர ரெட்டியின்  மணல் மாஃபியா, சட்டத்திற்கு புறம்பான ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள்,  போன்றவைகளை எடுத்துரைத்ததால் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, என்று தெரிவித்தார்.

ஆனால், போலிஸ் எஃப்.ஐ.ஆரில் எம்எல்ஏ கபு ராமச்சந்திர ரெட்டியின் பெயரை சேர்க்கவில்லை என்றும் , இது வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை, என்றும் அவூலா மனோகர் தெரிவித்தார்.  

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ ரெட்டி, "தன்  மீதான குற்றச்சாட்டைக் கேட்க  ஆச்சரியமாகத்தான் இருக்கிறது ."என் பெயர் சொல்லும் அந்த பத்திரிகையாளர் யார் என்று கூட எனக்கு தெரியாது , அதற்கும் (சம்பவத்துக்கும்) எனக்கு எந்த தொடர்பும் இல்லை," என்று கூறினார்.

ஆகஸ்ட் 12: எஃப்.ஐ.ஆர் எண் 211/2019 

கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி, நெல்லூர் கிராமம் சட்டமன்ற  தொகுதி எம்.எல்.ஏ கோட்டமிரெடி ஸ்ரீதர் ரெட்டி, ஜாமின்ரியோட்  என்கிற தெலுங்கு வார இதழின் ஆசிரியர் இல்லத்திற்கு சென்று தாக்கியதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

தாக்குதலுக்குள்ளான என்.டோலேந்திர பிரசாத், இது குறித்து தெரிவிக்கையில், " எம்.எல்.ஏ கோட்டமிரெடி ஸ்ரீதர் ரெட்டிக்கு எதிராக எழுதிய கட்டுரையின் விளைவாக கடந்த வாரம் கூர்மையான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் வந்து தன்னை தாக்கியதாகவும், அங்கம்பக்கத்தினர் வந்ததால் நான் உயிர் தப்பித்தேன்" என்றும் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டை ரெட்டி மறுத்தார். "அவர் எழுதிய கட்டுரை பற்றி விசாரிக்க நான் அவருடைய வீட்டிற்குச் சென்று உண்மைகளை தெரிவிக்க முயற்சித்தேன். அவர் என் மீது தவறான புகார் அளித்துள்ளார்," என்றார் எம்.எல்.ஏ ரெட்டி

Andhra Pradesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: