அச்சத்தில் நின்ற தூய்மை பணியாளர்கள் ; களத்தில் துணிந்து இறங்கிய ரோஜா!

துணிச்சல் மிக்க செயலைப் பார்த்து துப்புரவு பணியாளர்களும் பின்பு அவருடன் இணைந்து அந்த பகுதியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.

Andhra MLA Roja spray disinfectant in a village while health workers fear of COVID19  : களத்தில் நின்று போராடும் அனைத்து பெண் ஊழியர்கள், நிர்வாகிகள், தலைவர்கள், செவிலியர்கள், மருத்துவர்களுக்கு முதலில் ந்னறி தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் அனைவருக்கும் அவ்வளவு அர்பணிப்பு.கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் பெண்களின் அர்பணிப்பு குறித்து தினமும் நாம் பார்த்து வருகின்றோம். இந்நிலையில் நகரி தொகுதி எம்.எல்.ஏவான ரோஜாவின் அர்பணிப்பு அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.

கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் பலரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் போன்றோர் தொடர்ந்து மக்களைப் பாதுகாக்க போராடி வருகின்றனர். சில நேரங்களில் உயிரை பணயம் வைத்து அவர்கள் செயல்படும் போது அவர்களுக்கு அச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்.

ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் உள்ள வடமாலை பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்க நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தூய்மைப் பணியாளர்கள் அச்சத்தின் காரணமாக கிருமி நாசினி தெளிக்க தயக்கம் காட்டினர்.

அந்த தொகுதி எம்.எல்.ஏவான ரோஜா நேரடியாக அந்த கிராமத்திற்கு சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். அவரின் இந்த துணிச்சல் மிக்க செயலைப் பார்த்து துப்புரவு பணியாளர்களும் பின்பு அவருடன் இணைந்து அந்த பகுதியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர். தூய்மைப் பணியில் களமிறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட ரோஜாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க : மிரட்டும் கொரோனா… மிரண்டு போன வல்லரசுகள்… அசராமல் நிற்கும் பெண் தலைமைகள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close