/tamil-ie/media/media_files/uploads/2020/07/cats-20.jpg)
andhra police sub-inspector beaten a man to death for not wearing mask : கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகள் பெரிய அளவில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. ஏற்கனவே சாத்தான்குளம் பகுதியில் தந்தை-மகனை காவல்நிலையத்தில் தாக்கியதால் இருவரும் மரணம் அடைந்தனர். தற்போது சி.பி.ஐ. விசாரணை சென்று கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது அதே போன்ற சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டம் சீராலா நகரை சேர்ந்தவர் கிரண்குமார். இவர் கடந்த 19ம் தேதி அன்று தன்னுடைய தெருவில் முகக் கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு எஸ்.ஐ. விஜயகுமார் கிரண்குமாரை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கிரண்குமாரின் நிலையை அறிந்த அவருடைய உறவினர்கள் காவல் நிலையத்தில் இருந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குண்ட்டூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்று இன்று காலை மரணம் அடைந்தார். இந்த நிகழ்வு அங்கிருக்கும் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.