andhra pradesh cm jagan house : ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் அமைகிறது. இதற்கு ஆந்திரா அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது. இதனையடுத்து மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார்.
இதற்கிடையே, மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களில் வெற்றிப் பெற்று வாகை சூடியது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் நான்காவது மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உயர்ந்தது.
ஆந்திராவின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு அதிரடியான பல அறிவிப்புகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் பாதுகாப்பை பலப்படுத்த அவரின் இல்லத்தில் ஹெலிபேட் வசதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லம் அமைந்துள்ள குண்டூரில் உள்ள ததேபள்ளியில் இந்த ஹெலிபேட் அமையவுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த ஹெலிபேட் கட்டுமான பணிக்கு மட்டும் 1.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
1.89 கோடி எவ்வாறு பிரித்து செலவிடப்படும் என்ற விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. சாலை அமைப்பதற்கு மட்டும் ரூ. 40 லட்சம், இரும்பு பிரேம்களுடன் நிரந்தர தடுப்பு கம்பிகள் கட்ட ரூ .75 லட்சம், ஹெலிபேடில் காவலர் அறை மற்றும் கழிப்பறை கட்டுமான பணிக்கு ரூ. 30 லட்சம், பாதுகாப்பு இடுகைகள், வாயில் பாதுகாப்பு வசதி அமைத்திட ரூ. 31 லட்சம் என ஹெலிபேட் அமைப்பதற்கான கட்டுமான பணிக்கு தனித்தனியாக பிரித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுப்புறம் இருக்கம், ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 8 கோடி செலவில் கட்டிய பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க அதிரடி உத்தரவு பிற்பித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.