கொரோனாவில் மீண்டவர்களை ஒதுக்கிய அக்கம்பக்கத்தினர்; மன உளைச்சலால் தம்பதியினர் தற்கொலை!

கொரோனாவில் இருந்து அவர்கள் குணமடைந்த பிறகும் கூட அவர்களிடம் யாரும் சரியாக பேசவில்லை. அவர்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவதும் நின்றுவிட்டது.

By: August 3, 2020, 1:49:51 PM

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ளது தர்மவரம். அங்கு ஸ்ரீஷா, பெனிராஜ் என்ற தம்பதியினர் வசித்த்ஹ் உவந்தனர். பெனிராஜ் வெள்ள வியாபாரம் செய்து வந்தார். பெனிராஜின் தாயாருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெனி மற்றும் அவருடைய மனைவி ஸ்ரீஷா இருவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் முற்றிலும் குணம் அடைந்து தங்களின் வீட்டிற்கு திரும்பினர். அவர்களை அங்கு யாரும் வரவேற்கவில்லை. மாறாக அக்கம்பக்கத்தினர் மற்றும் வியாபாரிகள் அவர்களுடன் பேசுவதையே முற்றிலும் தவிர்த்துவிட்டனர். அவர்களின் கடைக்கு வருவதை வாடிக்கையாளர்கள் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டனர். அவர்களுக்கு கடன் கொடுத்தவர்களும் நாளுக்கு நாள் கடனை திருப்பி செலுத்துமாறு அழுத்தம் தந்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவ்விருவரும் தங்கள் வீட்டு மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Andhra pradesh couple who cured from covid19 committed suicide after they have been ignored by neighbors

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X