Advertisment

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகமடைந்த நபர் தற்கொலை

ஆந்திரப்பிரதேசம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகமடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus death andhra pradesh, man suicide coronavirus, கொரோனா வைரஸ், a mand suicide in andhra pradesh, a man suicide by coronavirus fear, hyderabad coronavirus death, கொரோனா வைரஸ் அச்சத்தால் தற்கொலை, ஆந்திராவில் கொரோனா வைரஸ் அச்சத்தால் தற்கொலை, coronavirus deaths india, coronavirus news, coronavirus symptoms,

ஆந்திரப்பிரதேசம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகமடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

சீனாவில் வுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவிவருவதால் உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளன.

இந்த நிலையில், ஆந்திரப்பிரதேசம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணா (50) என்பவர் தனக்கு கொரோனா வைரஸ் இருபதாக சந்தேகமடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவர் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

பாலகிருஷ்ணா மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என நம்பியதாகவும் தெரிவித்தனர். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வைரஸ் தொற்றுதலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், அவர் இரண்டு மூன்று ஆண்டுகளாக நீரிழிவு நோயாளியாக இருந்ததாகவும், பின்னர், அவரிடம் கொரோனா வைரஸ் ஃபோபியாவை உருவாக்கியதாகவும் கூறினர்.

சித்தூரில் உள்ள சேஷாம்னைடு காண்ட்ரிகா கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணா, கடந்த வாரம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ராம்நாரைன் ருயா அரசு பொது மருத்துவமனைக்கு (எஸ்.வி.ஆர்.ஆர்.ஜி.ஜி) சென்றுள்ளார். அவர் வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் கூறி, மருந்துகளை அளித்து ஆலோசனை வழங்கினர்.

இறந்தவரின் மகன் பாலமுரளி, தனது தந்தை பாலகிருஷ்ணா குடும்பத்தினரிடம் தான் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அருகில் வரக்கூடாதுஎன எச்சரித்ததாகவும் கூறினார். மேலும், அவர் அவர்களைத் தாக்கிவிட்டு அவர் தனது அறைக்குள் தன்னைப் பூட்டிக் கொண்டார் என்று பாலமுரளி கூறினார்.

இது பற்றி பாலமுரளி, “எனது தந்தை பாலகிருஷ்ணா திங்கள்கிழமை கொரோனா வைரஸ் தொடர்பான வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு இதே போன்ற அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார்.” என்று என்று தெரிவித்தார். அவரது இந்த நடத்தையைப் பார்த்து, பாலமுரளி மாநில அரசின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு டயல் செய்தார். ஆனால், அவர்கள் உங்கள் தந்தை சமீபத்தில் சீனாவுக்குச் செல்லாததால் கவலைப்பட ஒன்றுமில்லை என்று என்னிடம் சொன்னார்கள்.” என்று கூறினார்.

இந்த நிலையில்தான், திங்கள்கிழமை இரவு, பாலகிருஷ்ணா வீட்டை விட்டு வெளியேறினார். இதை அறிந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் அண்டை வீட்டார்களுக்கு விசாரித்விட்டு எங்கே சென்றார் என தேடினார். இதையடுத்து, அவர்களுடைய கிராமத்துக்கு அருகே உள்ள புறநகரில் ஒரு மரத்தில் பாலகிருஷ்ணாவின் உடல் தொங்குவதைக் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தோட்டம்பேடு காவல் நிலைய துணை ஆய்வாளர் வெங்கட்டா சுப்பையா இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இடம் கூறுகையில், “அவர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால், மருத்துவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் எதுவும் இருப்பதாக குறிப்பிடவில்லை. இது அவரது மனதில் அச்சத்தை உருவாக்கியது. மேலும், அவருடைய நடத்தை குடும்பத்தினருக்கு கவலை அளிக்கத் தொடங்கியது. அவருடைய மரணம் குறித்து பாலகிருஷ்ணாவின் குடும்பத்தினர் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை” என்று கூறினார்.

சித்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (டி.எம்.எச்.ஓ) டாக்டர் எம்.பெஞ்சலைய்யா கூறுகையில், மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் பாலகிருஷ்ணா சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்காக பரிசோதித்தார். அவரது ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் அவர் நன்றாக இருப்பதாகக் காட்டியது. ஆனால், மருத்துவர் அவருக்கு சிறுநீர் சீராக கழிக்க மருந்து கொடுத்தார்” என்று கூறினார்.

மேலும், ஆந்திராவில் நாவல் கொரோனா வைரஸ் தொடர்பான புகார்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று டி.எம்.எச்.ஓ மீண்டும் வலியுறுத்தினார். எஸ்.வி.ஆர்.ஆர்.ஜி.ஜி மருத்துவமனையிலும் 20 படுக்கைகள் கொண்ட கண்காணிப்பு வார்டு உருவாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Coronavirus Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment