/indian-express-tamil/media/media_files/FN5NHEIkNs3NBghQXFiU.jpg)
போக்குவரத்து துறை அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி ஹரிதா ரெட்டி.
ஆந்திர மாநில போக்குவரத்து அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி மனைவி ஹரிதா ரெட்டி போலீஸ் அதிகாரியை திட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் மீது கடும் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன. ஹரிதா தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் இல்லை; தெலுங்கு தேசம் கட்சியிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லை.
இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், “எங்களுக்கு இடையே சில தவறான புரிதல் இருந்தது. நெறிமுறையின்படி எஸ்ஐ அவருடன் வருவார் என்று யாரோ அவரிடம் கூறியுள்ளார்கள். ஆனால் அத்தகைய நெறிமுறை எதுவும் இல்லை" என்றார்.
தொடர்ந்து, “அந்த தவறான புரிதலின் காரணமாக, அவர் அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. எனக்குத் தெரிந்தவுடன் நான் அங்கு விரைந்தேன். அவருக்கு கோபம் ஏற்பட்டது. மதியம் சுமார் 3 மணியளவில் நான் அவரிடம் நடந்ததை விளக்கினேன். நாங்கள் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டோம். இது மிகவும் தீவிரமான விஷயம் அல்ல. ஆனால் வீடியோ வைரலாகிவிட்டது” என்றார்.
அமைச்சரின் மனைவியின் அணுகுமுறையை எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த நலையில், முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடு அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி தனது மனைவியின் நடத்தைக்கு மன்னிப்பு கேட்டார். அப்போது, “இது நடந்திருக்கக்கூடாது, நான் வருந்துகிறேன். நான் மன்னிப்பு கேட்கிறேன், என் மனைவியும் மன்னிப்பு கேட்டுள்ளார். இது மீண்டும் நடக்காது” என அமைச்சர் கூறினார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Andhra Pradesh minister’s wife berates cop on camera, husband apologises after rap from CM Naidu
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.