80 Arrested for raping Minor girl, Minor Girl Raped Continuously after her Mother death- ஆந்திரா மாநிலத்தில், 13 வயது மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் 10 பேரை, குண்டூர் மேற்கு மண்டல போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஆந்திராவில் 8 மாதங்களுக்கும் மேலாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 13 வயது சிறுமி, குண்டூரில், ஏப்ரல் 19 அன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டார். விசாரணையில் 80க்கும் மேற்பட்ட ஆண்களால் 8 மாத காலம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
கடந்த ஜூன் 2021 இல் சிறுமியின் தாய் கொரோனா காரணமாக இறந்தார். அப்போது கொரோனா மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் நட்பாக இருந்த முக்கிய குற்றவாளியான ஸ்வர்ண குமாரி’ கவனித்துக்கொள்கிறேன் என்ற பெயரில் சிறுமியை தத்தெடுத்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்தினாள்.
இந்த கும்பலிடம் சிக்கிய 13 வயது சிறுமி கடந்த 8 மாதங்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள வெவ்வேறு விபச்சார விடுதிகளுக்கு அனுப்பப்பட்டாள். இந்நிலையில் ஆகஸ்ட் 2021 இல் சிறுமியின் தந்தை புகார் அளித்ததை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து’ நேற்று (ஏப்.19) செய்தியாளர்களிடம் கூடுதல் எஸ்பி கே.சுப்ரஜா பேசியது; குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 74 பேரை போலீசார் கைது செய்துள்ளனர், ஆறு பேரை காணவில்லை என்றும் ஏஎஸ்பி கூறினார்.
“மொத்தத்தில் 35 பேர் விபச்சார புரோக்கர்கள். சிறுமியின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, பல கும்பல்கள் சிறுமியை விலைக்கு வாங்கி, பல மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர்,” என்று ஏஎஸ்பி கூறினார்.
பிடிபட்ட கும்பலிடமிருந்து 53 செல்போன்கள், ஒரு கார், 3 ஆட்டோக்கள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தெலுங்கு மாநிலங்களில் மைனர் சிறுமி பலாத்கார வழக்கில் 80 பேர் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“