Advertisment

மதுபானக் கடைகளை கைப்பற்றிய அரசு - பூரண மதுவிலக்கை நோக்கி ஆந்திரா

AP New Alcohol Policy : மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதைப்பொருள் மையங்களை அமைக்கும் பணியையும்  அரசாங்கம் ஈடுபடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
visakhapatnam gas leak state government announces 1 crore compensation

visakhapatnam gas leak state government announces 1 crore compensation

பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் முதல் படியாக,ஆந்திர அரசு மாநிலம் முழுவதும் உள்ள 3,500 மதுபான கடைகளை கையகப்படுத்தியுள்ளது. அரசுக்கு சொந்தமான ஆந்திர மாநில பானங்கள் கழகத்தால் இந்த மதுபான கடைகள் இனி நடத்தப்படும். இந்த விற்பனை நிலையங்களை நடத்த சுமார் 3,500 மேற்பார்வையாளர்களும், 8,033 விற்பனையாளர்களும்  நியமிக்கப்படயுள்ளனர். மேலும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதா என சோதிக்க, 678 போலீஸ் கான்ஸ்டபிள்கள் நியமிக்கவும் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

படிப்படியாக மதுபான நுகர்வைக் குறைக்க, மதுபான கடைகள் இயக்கப்படும் நேரங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.    காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கவந்த வந்த கடைகள் இனிமேல் 11 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். காலப்போக்கில் ஒரு நாளைக்கு 3-4 மணி நேரம் மட்டுமே இயங்கும் விதியைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது ஆந்திரா அரசு.

       ஒய்.எஸ்.ஜகன் ஆந்திராவில் மதுபானத்தை தடை செய்ய விரும்புகிறார். இது சாத்தியமானதா?               

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 4,380 என்ற கணக்கில் இருந்த மதுபானக் கடைகளை  3,500- ஆக குறைக்கும் நடவடிக்கையை எடுத்தது அம்மாநில அரசு. முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து  நுகர்வு 18 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரப்பூரவ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

துணை முதலமைச்சர் (கலால்) கே நாராயண சுவாமி கூறுகையில், "நாங்கள் கடந்த மாதத்தில்  475 மதுபான கடைகளை சோதனை அடிப்படையில் கையகப்படுத்தினோம். அக்டோபர் 1 ம் தேதி முதல் அனைத்து மதுக்கடைகளின் உரிமங்கள் காலாவதியானதால் தற்போது அனைத்து மதுபானக் கடைகளையும் கையகப்படுத்தியுள்ளோம், ஒரு வருடத்திற்குள் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதைப்பொருள் மையங்களை அமைக்கும் பணியையும்  அரசாங்கம் ஈடுபடும்," என்றார் நாராயண சுவாமி.

மேலும், அவர் தெரிவிக்கையில், "ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மே முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து, கிராமப்புறங்களில் பெரும்பாலும் செயல்பட்டு வரும் 43,000 சட்டவிரோத மதுபான கடைகளை இந்த அரசாங்கம் மூடியுள்ளது, ” என்று சொன்னார்.

மே 30 முதல் செப்டம்பர் 30 வரை,  2,872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோத மதுபானக் கடைகளை நடத்தியதாக 2,928 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர்.

அதிகார்ப்பூர்வ கணக்கின்படி, ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை, ஆந்திராவின் கலால் வரியின் மூலம் ரூ .3,326.68 கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாய், 2014-15ல் ரூ .3,839 கோடியாகவும்,2017-18 ல் ரூ .5,789.67 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த பூரண மதுவிலக்கு ஜெகன் மோகன் பாதயாத்திரையின் போது பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதியாகும். முந்தைய தெலுங்கு தேசம் கட்சி சட்டவிரோத மதுபானக் கடைகளை மூடாததல் சமூக பேரழிவு நடந்தது, குடிப்பழக்கம் காரணமாக வீடுகள் சிதைந்தன.  இந்த பூரண மதுவிலக்கு பிரச்சாரத்தால் ஜெகன் மோகன் ரெட்டி பாதயாத்திரையில் லட்சக்கணக்கான பெண்களின் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment