18 ஆவது மக்களவைத் தேர்தலுடன் 4 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. எந்த மாநிலத்தில் எப்போது தேர்தல் என்பதை இப்போது பார்ப்போம்.
ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களும் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும்.
ஒடிசாவில் மே 13 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 13, 20, 25 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில் ஒரிசாவில் தேர்தல் நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4 ஆம் தேதி நான்கு மாநில தேர்தல்களுக்கான முடிவுகளும் அறிவிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“