ஆந்திரா மாநிலத்தின் கனவு திட்டமான போலவரம் நீர்பாசனத்திட்டம் கின்னஸ் புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 32,100 கன மீட்டர் கான்கிரீட் பூசப்பட்டதற்காக போலவரம் திட்டம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.
ஆந்திர பிரதேசத்தின் 75 ஆண்டுக்கும் மேலான கனவுத் திட்டம் நிறைவேற இன்னும் சில மாதங்களே உள்ளன. ஒட்டுமொத்த ஆந்திர மக்களின் நீண்டகால கனவுத் திட்டமான “போலவரம் நீர்பாசனத்திட்டத்தின்“ கட்டுமான பணிகள் உச்சகட்ட வேகத்தில் நடைபெற்றுவருகிறது.
கோதாவரி தேசத்தின் பெரிய நதிகளில் ஒன்றாகும். இதில் வருடந்தோறும் 3000 டிஎம்சி தண்ணீர் கட்டுப்பாடின்றி கடலுக்குள் பாய்கிறது. எனவே அணையின் அடியிலும் பக்கவாட்டிலும் நீர் ஊடுருவி செல்லாமல் இருக்க டிப்கிராம் சுவர் ஒன்று தரையிலிருந்து 130 முதல் 137 அடி ஆழம் வரை 1.5 மீ தடிமன் உள்ள வலுவான பென்டோனைட் மற்றும் கான்கிரீட் கலவையால் 1397 மீ நீளத்திற்கு ஜெட் க்ரடிங் தொழிற்நுட்பத்தால் நிறுவப்படுகிறது.
இதனைக் கட்டிமுடிக்கும் வரை தற்காலிகமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ள நதியின் குறுக்கே அமைக்கப்படும் தற்காலிகத் தடுப்பு அமைப்பு கட்டப்பட்டுள்ளது. அணையானது 50 லட்சம் கன அடி தண்ணீரை தாங்கும் பலம் கொண்டது. இதுவரை கோதாவரியில் 30 லட்சம் கன அடி நீரே அதிகபட்சமாக பாய்ந்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/01/mla-3-7-300x167.jpg)
அணையின் இடது கால்வாய் வழியாக 40 டிஎம்சி நீரானது 181.5 கிமீ நிலப்பரப்பை வளமாக்கி விசாகப்பட்டினம் வழியாக வங்காள விரிகுடா நோக்கி பயனிக்கிறது. இதில் 23.44 டிஎம்சி நீரானது விசாகா. மக்களின் குடிநீர் தேவைக்கும் மற்றும் தொழிற்சாலைத் தேவைக்கும் பயன்படுகிறது. மேலும் சட்டீஸ்கர், ஒடிசா மாநிலங்கள் முறையே 1.5 மற்றும் 5 டிஎம்சி நீரைப் பெறுகின்றன.
ஆந்திரா மக்கள் வழி மேல் விழி வைத்து இந்த திட்டத்திற்காக காத்திருக்கின்றனர். இதற்கான கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வரும் நிலையில், போலவரம் திட்டம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
24 மணி நேரத்தில் 32,100 கன மீட்டர் கான்கிரீட் பூசப்பட்ட சாதனைக்காக கின்னஸ் புத்தக்கத்தில் இந்த திட்டம் இடம் பெற்றுள்ளது. நேற்று காலை 8 மணிக்கு துவங்கிய கான்கிரீட் பணி இன்று காலை 8 மணி வரை இடைவிடாமல் நடைப்பெற்றது. இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்திய அனைவருக்கும் ஆந்திரா முதல்வர் சந்திர பாபு நாயுடு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.