Advertisment

மதுவிலக்கு மாநிலம் ஆகிறது ஆந்திரா : பார்களுக்கான லைசென்ஸ் கட்டணம் கிடுகிடு...

Jagan Mohan Reddy headed Andhra pradesh : மதுவிலக்கு மாநிலமாக ஆந்திராவை அடுத்த ஆண்டுக்குள் மாற்ற ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மதுவிலக்கு மாநிலம் ஆகிறது ஆந்திரா : பார்களுக்கான லைசென்ஸ் கட்டணம் கிடுகிடு...

Sreenivas Janyala

Advertisment

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு, மாநிலத்தில் செயல்பட்டு வரும் 798 பார்களின் லைசென்ஸ்களை ரத்து செய்துள்ளதோடு மட்டுமல்லாது, புதிய விதிமுறைகளின்படி பார் லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகி இரண்டு மாதங்களுக்குள்ளாக, மாநிலத்தில் செயல்பட்டு வந்த மது விற்பனை கடைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாராயணசாமி மேலும் தெரிவித்துள்ளதாவது, மதுவிலக்கு மாநிலமாக ஆந்திராவை அடுத்த ஆண்டுக்குள் மாற்ற ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய கொள்கை, ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இரண்டு ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் இந்த புதிய கொள்கையின்படி 479 பார்களுக்கு மட்டுமே இயங்க லைசென்ஸ் வழங்கப்படும். மூன்று நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதற்கு மேற்பட்ட தர ஹோட்டல்களில் பார் வைக்க லைசென்ஸ் கட்டணம் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1.45 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 10 சதவீதம் அளவிற்கு இந்த கட்டணம் அதிகரிக்கப்படும். மற்ற தர பார்களுக்கான லைசென்ஸ் கட்டணம் ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.

அக்டோபர் 1ம் தேதி வெளியிட்ட புதிய கொள்கையின்படி, மாநிலத்தில் உள்ள பார்களின் எண்ணிக்கையை 40 சதவீத அளவிற்கு குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், மது விற்பனை கடைகளின் எண்ணிக்கை 4,380 என்ற அளவில் இருந்து 3,500 என்ற அளவிற்கு குறைக்கப்பட உள்ளது. இந்த 3,500 மது விற்பனைக்கடைகளையும் அரசே நடத்த உள்ளது.இதன்மூலம், மாநிலத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ளது. இது திடீரென்று எடுத்த முடிவு அல்ல. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போதே, ஜெகன்மோகன் ரெட்டி, மதுவிலக்கு ஆந்திரா என்ற வாக்குறுதியை அளித்திருந்ததாக நாராயண சாமி கூறியுள்ளார்.

பார் அல்லது மது விற்பனை கடை எதுவானாலும் மக்களிடையே மதுவின் பயன்பாட்டை குறைத்து மதுவிற்பனை கடைகள் மற்றும் பார்களை நிரந்தரமாக மூடுவதே, அரசின் கொள்கை ஆகும்.

பார்கள் மாதம் ஒன்றிற்கு ரூ.1.50 கோடி அளவிற்கு மட்டுமே மது வகைகள் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், இந்த பார்கள் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுவர். அரசின் சார்பில் நடத்தப்பட உள்ள மது விற்பனை கடைகளில், மது அருந்தும் கூடங்கள் மூடப்படும்.

சிறிது சிறிதாக மது வகைகள் கிடைத்தலை குறைத்து, பின் முழுவதும் மதுவிலக்கு மாநிலமாக ஆந்திரா மாற்றியமைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு : அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர பிரதேச ஒயின் மற்றும் மது வகைகள் டீலர்கள் சங்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அரசின் முடிவு ஒருதலைப்பட்சமாக உள்ளது. இதன்காரணமாக 319 பார்களின் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது, அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசின் புதிய கொள்கையின்படி, பார்களை நடத்த அதிகம் செலவாகும். அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment