ஆந்திரப் பிரதேச உள்ளாட்சி தேர்தல்: பெரும்பான்மை இடங்களை வென்றது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

660 ஜில்லா பரிஷத் பிராந்திய தொகுதிகளில் 500க்கும் மேற்பட்ட இடங்களிலும் மற்றும் 10,047 மண்டல் பரிஷத் பிராந்திய தொகுதிகளில் 8,500 இடங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றுள்ளது.

Andhra Pradesh, YSR Congress sweeps ZPTC and MPTC polls, ஆந்திரப் பிரதேசம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி, andhra pradesh cm jagan mohan reddy, ysr congress party

ஜில்லா பரிஷத் பிராந்தியத் தொகுதிகள் (ZPTC) மற்றும் மண்டல் பரிஷத் பிராந்தியத் தொகுதிகள் (MPTC) ஆகியவற்றில் பெரும்பான்மையை வென்றதன் மூலம், ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி – மே 2019 இல் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, முதல் பஞ்சாயத்து வரை அனைத்து நிலைகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் சுத்தமாக வெற்றி பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற ZPTC மற்றும் MPTC தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டது. வியாழக்கிழமை, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவில் முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு (எஸ்இசி) உத்தரவிட்ட ஆந்திர உயர் நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை அனுமதித்தது.

660 ZPTCகளில், பல காரணங்களுக்காக 8 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. மீதமுள்ள 652 இடங்களில், 126 ZPTCகளில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் . அதே நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்காக காத்திருந்தபோது 11 வேட்பாளர்கள் இறந்தனர். மீதமுள்ள 515 ZPTCகளில் சுமார் 2,050 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

10,047 MPTCகளில், 375 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 2,371 இடங்களில் போட்டியின்றி ஒருமனதாக வென்றது. 81 வேட்பாளர்கள் வாக்குப்பதிவுக்குப் பிறகு இறந்தனர். மேலும், 7,220 MPTCகளுக்கு 18,700 வேட்பாளர்கள் போட்டியிட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்ட குப்பம் மண்டலத்தில் 19 MPTCகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது.

ஏப்ரல் 2019ல் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 175 சட்டமன்ற இடங்களில் 151 இடங்களிலும், 25 மக்களவைத் தொகுதிகளில் 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த மார்ச் மாதம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தம் 12 மாநகராட்சிகளிலும், 75 நகராட்சிகள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் 74 இல் வெற்றி பெற்றது. பிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில், கட்சி சின்னங்களில் போட்டியிடவில்லை என்றாலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 13,081 இல் 10,536 பஞ்சாயத்துகளை வென்றனர்.

வாக்கு எண்ணிக்கை இன்னும் நடந்து கொண்டிருந்தது என்றாலும், மாலைக்குள் 660ZPTCகளில் 500 க்கும் மேற்பட்ட இடங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வென்றது. 10,047 MPTCகளில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 8,500 க்கு மேல் வென்றது. தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜன சேனா ஆகியவை ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றன.

முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, கிராம மற்றும் வார்டு செயலகங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வீடு தேடி சென்று நிர்வாகத்தை வழங்குவதும், தேர்தலின்போது அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்தது என்று கூறினார்.

660 ZPTCகளில், பல காரணங்களுக்காக 8 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. மீதமுள்ள 652ல், 126 ZPTCக்களில் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்காக காத்திருந்தபோது 11 வேட்பாளர்கள் இறந்தனர். மீதமுள்ள 515 ZPTCகளில் சுமார் 2,050 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Andhra pradesh ysr congress sweeps zptc and mptc polls ys jagan mohan reddy

Next Story
தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி பாஞ்சாப் முதல்வராக தேர்வுCharanjit singh channi punjab chief minister, Charanjit Singh Channi, பஞ்சாப், பஞ்சாப் முதல்வர், பஞ்சாப்பின் அடுத்த முதல்வர், பஞ்சாப்பின் அடுத்த தலித் முதல்வர், சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப்பின் அடுத்த முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ், Punjab, Punjab next CM Charanji Singh Channi, Punjab next CM, congress, Punjab first Dalit CM, Punjab next cm, congress
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com