/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-57.jpg)
இன்று அதிகாலை ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில், கொரோனா பாதிப்பு தனிமை மையமாக செயல்பட்டு வந்த ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி வைத்திருக்க, ஒரு தனியார் மருத்துவமனை விஜயவாடாவில் உள்ள ஹோட்டல் ஸ்வர்ணா அரண்மனையை குத்தகைக்கு எடுத்திருந்தது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
இந்த சம்பவம் குறித்த ஒரு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விபத்தில் படு காயமடைந்த அனைவருக்கும் சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Fire accident in a hotel turned COVID care facility in Vijayawada, Andhra Pradesh. Three feared dead, three more serious. @the_hindu@THAndhrapic.twitter.com/7DMKdVanYn
— Appaji Reddem (@appajireddem) August 9, 2020
முன்னதாக, அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு பெரும் தி விபத்தில் 5 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இந்த திடீர் தீ விபத்துக்கான காரணங்களை கண்டறிய விசாரணையை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கீதா சிங், முகேஷ் பூரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.