ஜனவரி 1-ம் தேதி அதிகாலை வடமேற்கு டெல்லியில் உள்ள கஞ்சவாலா என்ற இடத்தில் 20 வயதான அஞ்சலி சிங் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் காரில் சிக்கிக் கொண்டார். இதை கண்டு கொள்ளாமல் காரில் இருந்த 5 பேரும், சுமார் 10 கி.மீ தூரம் வரை அஞ்சலி இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் உடல் ஆடைகள் இன்றி நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஞ்சலியின் மரணத்திற்கு நீதி கேட்டு டெல்லியில் போராட்டம் வெடித்துள்ளது.
இந்நிலையில், அஞ்சலியின் மரணம் கேள்வியை எழுப்புகிறது. ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தையொட்டு சுமார் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தற்கும் அஞ்சலி உடல் கண்டெடுக்கப்பட்டதற்கும் இடையே கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஆனது. இந்த இடைப்பட்ட நேரத்தில் 5 முறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலியின் உடல் அவுட்டர் டெல்லியில் உள்ள சுல்தான்புரி மற்றும் கஞ்சவாலா இடையே 10 கி.மீக்கு தூரத்திற்கு மேல் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில், காரில் இருந்தவர்கள் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்ததுள்ளது. மேலும், அஞ்சலியின் பின்னால் வேறு யாரேனும் அமர்ந்து பயணம் செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவரான தீபக் தஹியா கூறுகையில், “விபத்து பயங்கரமாக இருந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தேன். பெண் காருக்கு அடியில் சிக்கி இழுத்து சென்றதை பார்த்தேன். நான் காரில் இருந்தவர்களை பார்த்து கத்தினேன், ஆனால் யாரும் காரை நிறுத்தவில்லை. யு-டர்ன் எடுத்து சென்றார்கள். நான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு அந்த காரை நோக்கி துரத்தி சென்றேன். ஆனால் அவர்கள் காரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டு சென்றார்கள்” என்றார்.
5 அழைப்புகள்
அதிகாலை 3.30-3.40 மற்றும் அதிகாலை 4.15 மணியளவில் 2 முறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் வந்தது என காவல்துறை சட்டம், ஒழுங்கு சிறப்பு ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா திங்கள்கிழமை தெரிவித்தார். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக 5 முறை அழைப்புகள் வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதிகாலை 2.30 மணியளவில் சம்பவம் தொடர்பாக முதல் அழைப்பு வந்துள்ளது. ரோகினி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஊழியர்கள் பதிலளிக்க முயன்றனர், ஆனால் காரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டாவது அழைப்பு, அதிகாலை 3.20 மணியளவில், ரோந்துப் பணியில் இருந்தவர்களுக்கு வந்துள்ளது. அவுட்டர் டெல்லியில் விபத்தில் சிக்கிய ஸ்கூட்டரை கண்டெடுத்தனர். அதிகாலை 3.56 மணிக்கு விபத்து குறித்து டைரியில் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் போலீஸாரால் விபத்தில் சிக்கியவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், அதிகாலை 3.30 மணியளவில், தஹியாவிடம் இருந்து அழைப்பு வந்தது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முயன்றபோது காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டார், உடலைக் காணவில்லை. அதிகாலை 4.15 மணியளவில். அதிகாலை 4.15 மணியளவில், சம்பவம் தொடர்பாக மற்றொரு அழைப்பு வந்தது. இதையடுத்து அஞ்சலியின் உடல் கஞ்சவாலாவின் ஜௌண்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது” என்று கூறினார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக உண்மை கண்டறியும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு டெல்லி போலீஸ் ஆணையர் சஞ்சய் அரோராவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கைது
விபத்தை ஏற்படுத்திய, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து காவல்துறை கூறுகையில், ரோகினி மாவட்ட போலீசார் காரைக் கண்டுபிடித்து அதன் உரிமையாளர் சுல்தான்புரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதற்கிடையில் ரோந்து பணியில் இருந்தவர்கள் உடலைக் கண்டெடுத்தனர். கார் உரிமையாளர் தனது காரை நண்பர்களுக்கு கொடுத்தாக கூறினார். அடுத்த இரண்டு மூன்று மணி நேரத்திற்குள், 2 குற்றவாளிகள் பிடிபட்டனர் என்றார்.
காரில் இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காரை ஓட்டிய தீபக் கண்ணா (26) , உத்தம் நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் அமித் கண்ணா (25), கிருஷ்ணன் (27) ஸ்பானிஷ் கலாச்சார மையத்தில் பணிபுரிபவர், மிதுன் (26) மற்றும் மனோஜ் மிட்டல் (27) சுல்தான்புரி பா.ஜ.க நிர்வாகி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் விபத்து
விபத்தின் போது அவர்கள் மதுபோதையில் இருந்ததாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு 7 மணியளவில் காரை எடுத்து அடுத்தநாள் காலை 5 மணிக்கு காரை திரும்ப ஒப்படைந்தனர். சேதமடைந்த நிலையில் காரை ஒப்படைத்துள்ளனர். அமித் மற்றும் தீபக் (தங்களுக்கு கார் கொடுத்த நபரிடம்) தாங்கள் மதுபோதையில் பெண்ணை இடித்து விபத்து ஏற்படுத்தியதாக கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் பயந்து தலைமறைவாகிவிட்டனர் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்பு, விதிமீறல்களை கண்காணிக்க 18,000 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் டிசிபி சுமன் நல்வா திங்கள்கிழமை கூறுகையில், “விபத்து நடந்த பகுதியில் ரோந்து பணியில் அதிகம் பேர் ஈடுபடவில்லை. ஏனெனில் அந்த பகுதி எந்த வணிக சந்தை அல்லது சுற்றுலா தலத்தின் கீழ் வரவில்லை. அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத இடம். அதிக மக்கள் கூடும் இடம், வளாகங்கள், குற்றம் அதிகம் நடக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த பகுதியில் அதிக குற்றச் சம்பவங்கள் நடக்கவில்லை. பெரிய சம்பவங்கள் எதுவும் அங்கு பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் இப்போது ரோந்து பணி பற்றி விவரங்களை சரிபார்த்து வருகிறோம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/