/tamil-ie/media/media_files/uploads/2023/01/anjali.jpg)
டெல்லி விபத்தில் உயிரிழந்த அஞ்சலி சிங்
சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருந்தவர் அஞ்சலி சிங். 20 வயதான இவருக்கு பஞ்சாபி பாடல்கள் என்றால் அலாதி பிரியம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை விபத்தில் இவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இவரது உடல் கிட்டத்தட்ட 10 கி.மீ. தூரல் வாகனத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டுள்ளது. அஞ்சலி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.
10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருமண மேக்அப் நிகழ்ச்சிகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை கூலியாக பெற்றுள்ளார். இதை வைத்துதான் அவரது பெரிய குடும்பத்தை நடத்திவந்துள்ளார்.
அஞ்சலியின் இறப்பு குறித்து அவரது தாயார் ரேகா கூறுகையில், என் மகளின் உடல் பல கிலோ மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவளது முதுகு தோல் உறிந்து காணப்பட்டது.
ஆடைகள் கிழந்து தொங்கிய நிலையில் காணப்பட்டது. என் அழகான மகளை பிணவறையில் பார்த்ததை நான் எப்படி விளக்குவேன்?
அவள் வேலை செய்ய விரும்பாத என் மற்ற மகள்களைப் போல் இல்லை. அவள் ஒரு துணிச்சலான ஆன்மாவாக இருந்தாள். அண்ணன்களுக்கு வேலை கிடைக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவள் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.
எங்கள் குடும்பத்துக்கு அவள்தான் எல்லாமே? என்றார். மேலும் எனது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
இதற்கிடையில் அஞ்சலி சிங் விபத்தில்தான் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அஞ்சலிக்கு உடன்பிறந்தோர் 5 பேர் உள்ளனர். இவர் மட்டுமே வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது வாகனம் ஒன்று மோதியதில் உயிரிழந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.