மும்பை அருகே ரயில் தண்டவாளத்தில் சிதைந்து கிடந்த பெண்ணின் உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கால் அணிகலன் (கொலுசு), குற்றவாளியின் கையில் கைவிலங்கு அணிவிக்க உதவி செய்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
திருவண்ணாமலை ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷபிரா (50). இவரது கணவர் இறந்துவிட்டதை தொடர்ந்து, மேற்குவங்க மாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக திருவண்ணாமலை வந்திருந்த 42 வயதான மன்சூர் ஷேக் என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார். இந்த திருமணம், ஷபிராவின் குழந்தைகளுக்கு பிடிக்காததால், அவரை ஒதுக்கிவிட்டனர். ஷபிராவும், ஷேக்கும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஷேக், மும்பை சென்றார். ஷபிராவுக்கு தெரியாமல், அங்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனிடையே, மே மாதத்தில், ஷேக்கை தேடி, சமீபத்தில் ஷபிரா மும்பை சென்றார். அங்கு மற்றொரு பெண்ணை ஷேக் திருமணம் செய்ததை அறிந்தார். பின் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டது. பின் சமாதானம் ஆனநிலையில், ஷபிராவிடம், நகைகளை தருமாறு ஷேக் கேட்டுள்ளார். அதற்கு ஷபிரா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அவரை கொலை செய்து, டோம்பிவேலி – கோபார் வழித்தடத்தில் உள்ள ரயில் தண்டவாளப்பாதையில் போட்டுவிட்டார்.
ரயில் தண்டவாளத்தில் பெண் சடலத்தை மீட்ட மும்பை போலீசார், அதுகுறித்த விசாரணையை துவக்கினர். அந்த பெண் குறித்த எவ்வித அடையாளமும் தெரியாதநிலையில், அந்த பெண் அணிந்திருந்த கால் கொலுசு கிடைத்தது. அதுகுறித்து விசாரித்ததில், திருவண்ணாமலை
ஒருவர் ஒரு குற்றத்தை செய்துவிட்டு எங்கு தப்பிச்சென்றாலும், ஏதாவது ஒரு வழியில் அவர் நிச்சயம் மாட்டுவார் என்ற உண்மையை, இந்த சம்பவம் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.