Advertisment

பட்ஜெட் அறிக்கை: விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடி!

2018-19ம் நிதி ஆண்டில் நாடு முழுவதும் விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பட்ஜெட் அறிக்கை: விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடி!

2018-19ம் நிதி ஆண்டில் நாடுமுழுவதும் விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

Advertisment

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அப்போது விவசாயத் துறை குறித்து அவர் தனது அறிக்கையில், "2020ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த அரசு முடிவு செய்துளள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.

விவசாயிகளுக்காக விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி 2018-19ம் நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்படும். நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் நன்று வளர்ச்சி அடைந்து 8 சதவீதத்தை எட்டியுள்ளது. அடுத்த நிதியாண்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்படும்.

விவசாய கழிவுகளை எரிக்காமல் மாற்று வழியில் பயன்படுத்த மாற்றுத்திட்டம் செயல்படுத்தப்படும். உணவு பதப்படுத்தலுக்கு ரூ.1400கோடி, கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.685 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.

கிசான் கிரெடிட் கார்டு வசதியை மீனவர்கள், கால்நடை விவசாயிகளுக்கும் வழங்க பரிந்துரை செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

More Details Awaited...

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment