பிஎம்சியின் சுகாதாரத் துறை தனது ஆறாவது ஜிகா வைரஸ் தொற்று மற்றும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இதுபோன்ற இரண்டாவது நோய்த்தொற்றைப் பதிவு செய்துள்ளது. எரண்ட்வானில் உள்ள கணேஷ்நகரைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு ஜிகா பாசிட்டிவ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில் இருக்கிறார், மேலும் ஜிகா தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எரண்ட்வானில் உள்ள கணேஷ்நகரில் இருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 12 மாதிரிகளில் ஏழு கர்ப்பிணிப் பெண்களின் மாதிரிகள் என்று பி.எம்.சி-யின் சுகாதாரத் துறையின் செயல் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கல்பனா பாலிவந்த் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். இரண்டு பேருக்கு பாஸ்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வெளியானது.
ஞாயிற்றுக்கிழமை, எரண்ட்வானைச் சேர்ந்த 28 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அந்த பெண் ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார், எந்த அறிகுறியும் இல்லை என்று புனே மாநகராட்சியின் உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜேஷ் டிகே தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின்படி, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா தொற்று, குழந்தையின் மூளை சம்பந்தப்பட்ட மைக்ரோசெபாலி மற்றும் பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும். இந்த குறிப்பிடத்தக்க அபாயங்கள் காரணமாக, பிற ஜிகா வைரஸ் தொற்று உள்ள நபர்களை இருக்கிறார்களா என எரண்ட்வானே மற்றும் முந்த்வா பகுதிகளிலும் பி.எம்.சி சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
முந்த்வாவில் இருந்து இரண்டு வழக்குகள் முன்னர் பதிவாகிய பின்னர், கோட்ரேவஸ்தியில் இருந்து கூடுதல் மாதிரிகளை சேகரிக்க சுகாதாரத் துறையும் கேட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பீதி அடைய எந்த காரணமும் இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு கர்ப்பிணிப் பெண்களையும் அவர்கள் கண்காணித்து வருவதாகவும் டாக்டர் டிகே கூறினார். பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டயறியப்பட்டவுடன் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக டாக்டர் டிகே கூறினார். “கணேஷ்நகர் குடியிருப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சரியாக மூடப்படவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்தப் பகுதியில் கொசுக்கள் பெருகும் இடங்களைக் கண்டறிந்ததால் அபராதமும் விதித்துள்ளோம்” என்று டாக்டர் டிகே கூறினார்.
Read in english