சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : காங்கிரஸின் முக்கியத் தலைவருக்கு ஆயுள் தண்டனை

31ம் தேதிக்குள் ஆஜராக உத்தரவிட்டு தீர்ப்பளித்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

Anti – Sikh Riots Congress leader Sajjan Kumar : 1984ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்த இந்திரா காந்தியை அவரின் பாதுகாப்புக் காவலர்கள் சுட்டுக் கொன்றார்கள். காவலர்கள் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அன்றைய சூழலில் நாடெங்கும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரங்கள் ஏற்பட்டன.

கலவரங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் வன்முறை வெடித்தது. டெல்லியில் மற்றும் சுமார் 2700 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

Anti – Sikh Riots Congress leader Sajjan Kumar

இந்திய தலைநகர் டெல்லி ராஜ்நகர் பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சஜ்ஜன் குமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பல்வான் கோகர், மற்றும் முன்னாள் கடற்படை அதிகாரி கேப்டன் பக்மால் உள்ளிட்டோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பல்வான் கோகார், பக்மால், மற்றும் கிர்தாரி லால் போன்றவர்களுக்கு 2013ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியும், இருவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கிவிட்டு, காங்கிரஸ் கட்சி உறுப்பினரான சஜ்ஜன் குமாரை மட்டும் விடுதலை செய்தது நீதிமன்றம்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய புலனாய்வுத்துறை, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவினை தாக்கல் செய்தது. அதனை இன்று விசாரணை செய்த டெல்லி நீதிமன்றம், சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்ததோடு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் வருகின்ற டிசம்பர் 31ம் தேதிக்குள் சஜ்ஜன் குமாரை சரணடையக் கூறி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

அரசியல்வாதிகள் வரவேற்பு

இந்த தீர்ப்பிற்கு ஆதரவாக பல்வேறு அரசியல்வாதிகள் தங்களின் வரவேற்பினை பதிவு செய்துள்ளனர். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, காந்தியும் காந்தியின் குடும்பத்தினரும் இந்த பாவத்திற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், இந்த தீர்ப்பினை நான் வரவேற்கின்றேன். இந்த தீர்ப்பிற்காக வெகுநாட்களாக காத்திருந்தோம். அதிகாரத்தில் இருப்பவர்கள், அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். யார் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருப்பினும், சட்டத்தின் முன்பு யாரும் தப்பிச் சென்றுவிடக் கூடாது என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ராம் மாதவ்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close