Advertisment

10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 10 மில்லியன் டாலர் மதிப்பிலான பழங்காலத்து சாமி சிலைகள், பொக்கிஷங்களை, மீண்டும் இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Antiq

ராஜஸ்தானில் உள்ள தனேசரா-மஹாதேவா கிராமத்தில் இருந்து திருடப்பட்ட பச்சை-சாம்பல் நிறத்திலான தனேசர் தேவியின் சாமி சிலை மற்றும் 1980-களில் மத்திய பிரதேசத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால பொருள்களை, இந்தியாவிடம் அமெரிக்க ஒப்படைத்துள்ளது. இவற்றின் மதிப்பு 10 மில்லியன் டாலர் எனக் கருதப்படுகிறது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Ancient Indian Goddesses come home: US returns $10 million worth of stolen treasures to India

 

1950-களின் காலகட்டத்தில் தனேசர் சாமி சிலைகள் உள்ளிட்ட 11 சிற்பங்கள் திருடப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதில், தனசேர் தேவி சிலைகள் நியூயார்க்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை, கடந்த 2022-ஆம் ஆண்டு பழங்கால பொருள்கள் மீட்பு பிரிவினர் கைப்பற்றினர்.

இவை கடந்த நவம்பர் 13-ஆம் தேதி இந்திய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்ட பழங்கால பொருள்களை, இனி வரும் மாதங்களில் திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு சிற்பம், நடனக் கலைஞரைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். கடத்தலுக்கு வசதியாக இதனை இரண்டு பாகங்களாக கடத்தல்காரர்கள் பிரித்தனர். கடந்த 1992-ஆம் ஆண்டு லண்டனில் இருந்து நியூயார்க்கிற்கு இந்த சிலை, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டது. பின்னர், இந்த சிலை ஒன்றாக இணைக்கப்பட்டு மெட்ரோபொலிடன் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு அதிகாரிகள் இதனை மீட்டனர்.

குற்றவியல் கடத்தல் தொடர்பான பல்வேறு விசாரணைகளின் கீழ் இந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் கடத்தல்காரர்களான பாஷ் கபூர் மற்றும் நான்சி வீனர் ஆகியோர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மார்ச் 2023 இல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையின்படி, சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபைனான்ஸ் அன்கவர்டு இதனை கண்டறிந்தனர். 

கடந்த மார்ச் 30, 2023 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 15 சிலைகள், மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Idols
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment