/indian-express-tamil/media/media_files/2025/08/25/anurag-thakur-hanuman-2025-08-25-12-06-08.jpg)
‘Hanuman ji first to go to space’: Anurag Thakur to schoolkids
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உனா நகரில், தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஒரு ஆச்சரியமான கருத்தைக் கூறினார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 'விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் யார்?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், கல்பனா சாவ்லா எனப் பல பெயர்களைச் சொன்னார்கள்.
அப்போது, அனுராக் தாக்கூர், "நம் தேசத்தின் பாரம்பரியங்களை நாம் பாடப்புத்தகங்களைத் தாண்டிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், நாம் ஆராய்வதற்கு நிறைய இருக்கிறது. பவனசுதன் அனுமன் தான் முதல் விண்வெளி வீரர்" எனக் கூறினார்.
அனுமன் விண்வெளிக்குச் சென்றாரா?
ராமாயணத்தில், அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் காட்சி நமக்கு நினைவிருக்கும். லட்சுமணனின் உயிரைக் காப்பாற்ற இமயமலையில் உள்ள சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர ராமர் அனுமனை அனுப்பினார். அனுமன், தனது அசாத்தியமான சக்தியால், இமயமலையின் ஒரு பகுதியை அப்படியே பெயர்த்து எடுத்து, ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று இலங்கையில் இறக்கினார்.
இந்த நிகழ்வைத்தான் அனுராக் தாக்கூர் விண்வெளிப் பயணம் என்று சொல்கிறார். நமது இதிகாசங்களில் வரும் இந்தக் காட்சிகள் அறிவியலோடு தொடர்புடையவை என்று அவர் கூறுகிறார். புராணங்களில் உள்ள இந்த நிகழ்வுகளைப் படிக்கும்போது மாணவர்களுக்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்படும் எனவும் அவர் கூறுகிறார்.
சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள்:
पवनसुत हनुमान जी…पहले अंतरिक्ष यात्री। pic.twitter.com/WO5pG2hAqT
— Anurag Thakur (@ianuragthakur) August 23, 2025
அனுராக் தாக்கூர் தனது உரையை 'எக்ஸ்' பக்கத்தில், "பவனசுதன் அனுமன் தான் முதல் விண்வெளி வீரர்" என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. சிலர் அவரது கருத்தைப் பாராட்டி, நம் இதிகாசங்களை அறிவியல் பூர்வமாகப் பார்ப்பது நல்லது என்கின்றனர். வேறு சிலரோ, "பாடப்புத்தகங்களைத் தாண்டி யோசிப்பது என்றால், மாணவர்களை நவீன அறிவியலில் கவனம் செலுத்தச் சொல்ல வேண்டும்" என்று கூறுகின்றனர்.
A member of parliament and former union minister asking school children who first set foot on the moon, and insisting that it was not Neil Armstrong but Hanuman, is deeply troubling.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 24, 2025
Science is not mythology. To mislead young minds in classrooms is an insult to knowledge,… https://t.co/lPgyMkt9ZN
இதுகுறித்து கனிமொழி எம்.பி. தன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”பள்ளிக் குழந்தைகளுக்கு மத்தியில் பேசிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அதுவும் முன்னாள் மத்திய அமைச்சர், நிலவில் முதலில் கால் பதித்தது யார் என்று கேட்டு, நீல் ஆம்ஸ்ட்ராங் இல்லை, அனுமன் தான் என்று சொல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அறிவியல் என்பது கட்டுக்கதையல்ல. வகுப்பறைகளில் இளம் வயதினரை இப்படித் தவறாக வழிநடத்துவது, அறிவிற்கும், பகுத்தறிவுக்கும், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள அறிவியல் மனப்பான்மைக்கும் இழைக்கப்படும் அவமதிப்பு ஆகும்.
இந்தியாவின் எதிர்காலம் என்பது, புனைவுகளுக்கும் உண்மைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் குழப்புவதில் இல்லை. மாறாக, ஆர்வத்தைத் தூண்டுவதில்தான் உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.