Any war with China will also involve Pakistan : புதன்கிழமை நடைபெற்ற இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆன்லைன் ஐடியா எக்ஸ்சேஞ்சில் பங்கேற்றார். அதில் சீனாவுடன் ஏதேனும் போர் ஏற்பட்டால் நிச்சயமாக அதில் பாகிஸ்தானும் பங்கேற்கும் என்று கூறியுள்ளார் பஞ்சாப் முதல்வர். லடாக்கில் சீன ஊடுருவல் என்பது அவர்களின் தசையை வலிமைப்படுத்துவது போல் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
கால்வானில் அவர்களின் ஊடுருவல் ஒன்றும் புதிதல்ல. 1962ம் ஆண்டும் அவர்கள் கால்வானிற்கு வந்தார்கள். ஆனால் இப்போது நாம் 10 படைப்பிரிவுகளுடன் தயார் நிலையில் இருக்கின்றோம். அதையும் தாண்டி சீனர்கள் உள்ளே வந்தால் ஏமாற்றம் அடைவார்கள் என்று கூறிய அவர் 1976ம் ஆண்டு பதிலடி வாங்கியது போல், இரண்டாவது முறையும் அவர்கள் இப்படி பதிலடி வாங்குவார்கள் என்று கூறியுள்ளார் அமரிந்தர்.
மேலும் படிக்க : ‘அது துரதிர்ஷ்ட நிகழ்வு; இப்போது பிரச்னையை முறையாக கையாளுகிறோம்’: சீனா
ஆனால் சீனா தன்னுடைய இருப்பை, திபெத் பீடபூமியில் இருந்து இந்திய பெருங்கடல் வரைக்கும் அதிகரித்து வருகிறது. அங்கு தான் நாம் இந்திய ராணுவத்தின் பலத்தையும் அதிகரிக்க வேண்டும். நீங்கள் (சீனா) ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகள் வேண்டும் என்கிறீர்கள். பிறகு சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் என்று நீடித்துக் கொண்டே இருந்தால் இதற்கு முடிவு தான் என்ன? ராணுவத்தை கொண்டு இதற்கு ஒரு முடிவுகட்டினால் நீங்கள் இதனை நிறுத்துவீர்கள் என்று கூறியுள்ளார்.
சீனாவை சமாளிக்க மலைப்பகுதிகளில் படைவீரர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இன்னும் நடைமுறைக்கு அது வரவில்லை. மற்ற கமண்டோ பிரிவுகளில் இருந்தும் படைகளை லடாக்கிற்கு அனுப்ப வேண்டும். இந்திய ராணுவத்தை வலுப்படுத்த இந்திய அரசு வளங்களை காண வேண்டும். நாம் பலமாக இருந்தால் மற்றவர்கள் ஒருமுறைக்கு மூன்று முறை யோசிப்பார்கள் என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியது குறித்து கேள்வி எழுப்பிய போது, காங்கிரஸ் மூத்த மட்டத்தில் இருக்கும் ஒழுங்குமுறை என்று கூறினார். நாங்கள் கோபமாக இல்லை ஆனால் அங்கு ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
To read this article in English
நான் முதல்வர். நான் அரசை பார்த்துக் கொள்கின்றேன். என்னிடம் சுனில் ஜாக்கர் இருக்கிறார். அவர் பி.பி.சி.சியின் தலைவர். கட்சியின் ஒழக்கத்தை அவர் தான் பராமரிக்க வேண்டும். இளைஞர் காங்கிரஸிடமும் மற்ற தலைவர்களிடமும் கட்டுப்பாட்டுடன் இருக்க கூறினால் அவர்கள் திருப்பி, நம்மிடம், டெல்லியில் என்ன நடக்கிறது என்று கேட்பார்கள். அது நல்லதல்ல என்று மேலும் விளக்கினார். இந்த கடித தனக்கு ஆச்சரியத்தை அளித்ததாக கூறும் அவர், காலையில் கடிதத்தை பார்த்தேன். பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்திருக்கும் செய்திகளை பார்த்தேன். அடுத்த நாளிலே காங்கிரஸ் காரிய கமிட்டியின் ஆலோசனை கூட்டம் குறித்து அறிவிப்பு வந்தது. என நடக்கிறது என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது கேள்விகள் எழுப்பப்படுகிறது. அடுத்த ஆலோசனை கூட்டத்திலும் அது நடைபெறும் என்று கூறினார்.
பஞ்சாப் மாநிலம் எவ்வாறு கொரோனாவை எதிர்கொள்கிறது என்று கேட்ட போது, துரதிர்ஷ்டவசமாக, எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இந்திய அரசு இதுவரை 101 கோடி கொடுத்துள்ளது. மாநில அரசு 500 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளது. என்னிடம் பணம் இல்லை. 44,570 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இவை குறைவு தான். ஆனால் நாங்கள் இந்தியாவில் வெறும் 2% என்று கூறியுள்ளார். செப்டம்பர் மாதம் 18ம் தேதிக்குள் 1.10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறும் முதல்வர், எனக்கு மூலங்கள் தேவை. இன்று தான் கேள்விப்பட்டேன் ஜி.எஸ்.டி கூட திரும்பி வராது என்று. நம் அனைவரின் வரிப்பணமும் இந்திய அரசால் வேறு எதற்கோ பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர்கள் மோடியை சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil