இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டும் என்பதில் இந்திய அரசு மிக உறுதியாக உள்ளது.
ஆனால், இதில் பொதுமக்களின் பங்களிப்பு என்பதே கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருந்தும் சிலர் தேவையில்லாமல் வெளியே வருவது, பைக்கில் சுற்றுவது, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களை போட்டோ, வீடியோ எடுக்க வெளியே வருவதுமாய் இருக்கின்றனர்.
"நாங்கள் சட்டத்தை மீறவில்லை" - டெல்லி நிஜாமுதீன் மர்காஸ் மறுப்பு
அரசு வைரஸைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதா, பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் அக்கறை செலுத்துவதா அல்லது யார் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருகிறார்களா என்பதை கண்காணிப்பதா என்று புழுங்கி நிற்கிறது.
கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு அதிகாரிகள் அதிக சிரத்தை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் மாருதி ஷங்கர், அரசு குதிரையில் கொரோனா வைரஸ் படங்களை குதிரையின் மேல் பெயிண்ட்டால் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
31, 2020
வெள்ளை நிறத்திலான அந்த அரசு குதிரையின் உடலில் கொரோனா படம் வரையப்பட்டுள்ளது.
சமூக தளங்களில் இந்த படம் வைரலாக, பலரும் சப் இன்ஸ்பெக்டரை பாராட்டி வருகின்றனர். அதேசமயம், விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இதுபோன்று பெயிண்ட்டால் வரைவது குதிரையின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்றும், அந்த படங்களை அவர் உடலில் வரைந்து கொள்ள வேண்டியது தானே என்றும் விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”