n-chandrababu-naidu | supreme-court-of-india | ஆந்திராவில் திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் தனக்கு எதிரான எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு செவ்வாய்கிழமை (ஜன.16,2024) இரு வேறு தீர்ப்புகள் வழங்கினர்.
இதையடுத்து, வழக்கை பெரிய அமர்வு முன் வைப்பது குறித்து பரிசீலிக்க இந்திய தலைமை நீதிபதிக்கு அமர்வு அனுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழக ஊழலில் செப்டம்பர் 9, 2023 அன்று கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவின் சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அவரை கைது செய்த சி.ஐ.டி., நாயுடு இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி என்றும், அரசு நிதி ரூ.371 கோடியை ஷெல் நிறுவனங்களுக்கு மாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : AP skill development scam: SC delivers split verdict on quashing FIR against Chandrababu Naidu, refers matter to larger bench
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“