உலகில் சர்வ வல்லமை மற்றும் பல்திறன் கொண்ட அப்பாச்சி ஏஹச் 64இ ரத்தத்தைச் சேர்ந்த எட்டு போர் ஹெலிகாப்டர்கள் அதிகாரப் பூர்வமாக இன்று இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப் படை தலைமைத் தளபதி பி.எஸ். தனோவா தலைமை வகித்தார்.
கடந்த 2015 செப்டெம்பரில் இந்திய விமானப் படை அமெரிக்க அரசு மற்றும் போயிங் நிறுவனத்துடன் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தம் செய்திருந்தது என்பது குறிப்படத்தக்கது.
முதல்கட்டமாக, நான்கு ஹெலிகாப்டர்கள் கடந்த ஜூலை 27-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக இன்று 8 போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது.
2020 க்குள் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய விமானப் படையில் இணைக்கும் என்ற இந்திய அரசின் திட்டம் இதன் மூலம் சாத்தியமாகும் என்று நம்பப்படுகிறது.