Advertisment

பிரிவினையால் பிரிவு: மீண்டும் மக்காவில் இணைந்த இந்தியா-பாக். குடும்பங்கள்

1947-ம் ஆண்டு பிரிவினையின் போது பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சந்திக்க பலமுறை முயற்சிகள் மேற்கொண்டனர், ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

author-image
WebDesk
New Update
reunion.jpg

17 மாதக் காத்திருப்பு, மறுக்கப்பட்ட அனுமதிகள் மற்றும் கடுமையான மன வேதனைகளுக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த 105 வயதான ஹஜ்ரா பீபி தனது மருமகள் (Niece) ஹனிஃபானுடன் (60) கடந்த வாரம் (வியாழக்கிழமை)  சவூதி அரேபியாவின் புனித நகரமான மெக்கா நகரில்  உள்ள காபாவில் சந்தித்தனர். 

Advertisment

1947 ஆம் ஆண்டு பிரிவினையின் போது பிரிந்த குடும்பங்கள், சந்திக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இறுதியாக ஹஜ்ரா பீபி தனது மருமகளுடன் மீண்டும் இணைவதற்கு, கடந்த ஆண்டு ஜூன் ஒரு மனதைக் கவரும் தொலைபேசி அழைப்பு வந்தது.  பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் இருவரையும் மெக்காவில் இணைய வைக்க முயற்சி செய்தார். 

குடும்பங்கள் குருத்வாரா கர்தார்பூர் சாஹிப்பில் சந்திக்க பல முயற்சிகள் மேற்கொண்டனர் - இது விசா இல்லாத எல்லைக் கடக்கும் இந்தியா-பாகிஸ்தான் பகுதியாகும். பாகிஸ்தானின் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் மற்றும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள குருத்வாரா தேரா பாபா நானக் ஆகிய பகுதிகளை இணைக்கிறது.  இருப்பினும், ஒவ்வொரு முறையும் தேவையான அனுமதிகளைப் பெறத் தவறிவிட்டனர்.

பஞ்சாபில் உள்ள கபுர்தலாவில் வசிக்கும் ஹனிஃபான், ஹஜ்ரா பீபியை சந்திக்க பாகிஸ்தான் அரசிடம் விசா கோரி விண்ணப்பித்திருந்தார், அது தொடர்ந்து மறுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஹஜ்ரா பீபி முதல் முறையாக ஹனிஃபாவுக்கு வீடியோ கால் செய்தார். அந்த அழைப்பின் போது தன் தங்கையான மஜீதாவை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது சிறிது காலத்திற்கு முன் அவர் இறந்துவிட்டதாக ஹனிஃபா கூறியுள்ளார். இந்த செய்தி ஹஜ்ரா பீபியை உடைத்தது.

இரு குடும்பத்தினரும் நம்பிக்கையை கைவிடத் தொடங்கியபோது, ​​பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் நசீர் தில்லான் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர் பால் சிங் கில் ஆகியோர் அவர்களுக்கு உதவ முன்வந்தனர், இரு குடும்பத்தினரையும் மக்காவில் சந்திக்க வைக்க உதவினர். கடந்த வாரம் வியாழக்கிழமை இருவரும் சந்தித்தனர். 

“ஹஜ்ரா பீபியின் வீடியோவை நாங்கள் பதிவேற்றியுள்ளோம், இது இந்தியாவின் பஞ்சாபில் அவரது சகோதரியின் குடும்பத்தைக் கண்டறிய எங்களுக்கு உதவியது. ஹஜ்ரா 1947 பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு வந்திருந்தார், அதேசமயம் அவரது தங்கையான மஜீதா மீண்டும் இந்தியாவில் இருக்க முடிவு செய்திருந்தார்,” என்று தில்லான் கூறினார்.

தில்லானும் பீபி உடன் மக்காவிற்குச் சென்றார். இருவரின் சந்திப்பை ரெக்கார்டு செய்து தனது  யூடியூப் சேனலான பஞ்சாபி லெஹரில் பதிவேற்றினார். ஹஜ்ரா பீபி மற்றும் ஹனிஃபான் இருவரும் காபாவில் சந்தித்தவுடன் இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர். அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தனர், ஆனால் கடந்த வியாழக்கிழமைதான் இருவரும் முதல்முறை சந்தித்தனர். 

குருத்வாரா கர்தார்பூர் சாஹிப்பைப் பார்வையிட ஹனிஃபானுக்கு ஏன் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. முன்னதாக, பிரிவினையால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் சாதிக் கான் மற்றும் சிக்கா கான் ஆகியோர் குருத்வாரா கர்தார்பூர் சாஹிப்பில் சந்தித்தனர். ஹஜ்ரா பீபியை சந்திக்க ஹனிஃபானும் பாகிஸ்தான் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கை இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தால் மறுக்கப்பட்டது ” என்று தில்லான் கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/torn-apart-partition-indo-pak-reunion-families-mecca-9035310/

இரு குடும்பங்களுக்கும் பொருளாதார வசதி இல்லாததால், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டாவது சீக்கியர் இவர்கள்  மக்காவிற்கு செல்ல நிதி வழங்கி ஏற்பாடு செய்தார். தில்லான் கூறுகையில், “அமெரிக்காவைச் சேர்ந்த பால் சிங் கில்,  மக்காவில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். நிதி உதவி வழங்கினார். ஹஜ்ரா பீபிக்கு ஏற்கனவே 105 வயதாகிவிட்டதால், இந்த சந்திப்பை விரைவாக ஏற்பாடு செய்தோம்” என்று கூறினார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment