இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு நாளை, ஒட்டுமொத்த நாடே அனுஷ்டித்து வருகிறது.
ஏவுகணை மனிதர், அணு சக்தி விஞ்ஞானி, மக்கள் ஜனாதிபதி என்று நாட்டு மக்களால் போற்றப்பட்ட டாக்டர் அப்துல் கலாம், 2015ம் ஆண்டின் இதேநாளில் (ஜூலை 27), ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
2002முதல் 2007ம் ஆண்டுவரை நாட்டின் முதல் குடிமகன் என்ற ஜனாதிபதி பதவியை அலங்கரித்தார். 1998ம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய பொக்ரான் அணுகுண்டு சோதனை, சர்வதேச நாடுகளிடையே இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்தது. இந்த பொக்ரான் அணுகுண்டு திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் டாக்டர் அப்துல் கலாம் ஆவார்.
அப்துல் கலாமின் நினைவுநாளையொட்டி, நெட்டிசன்கள் டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்துகள்...
பிரேம்டாம்நெஸ்டர்
யாரை வேண்டுமென்றாலும் எளிதாக தோற்கடித்துவிட முடியும். ஆனால், அனைவரையும் வெல்வது என்பது மிகவும் கடினமான விசயம்.
பரீத் அலி
சந்திராயன் 2விற்கான அடிக்கல்லை நாட்டியவர் அப்துல் கலாம். இன்று அவரது கனவு நனவாகியுள்ளது, ஆனால், சிலரே அவரை நினைவில் வைத்துள்ளனர். ஊடகங்களும் அமைதி காக்கின்றன.
ஆசிஷ் பரத்வாஜ்
இந்திய குடியரசின் சிறந்த ஜனாதிபதி. கோடிக்கணக்கான இளைஞர்களின் ரோல்மாடல்