CM Hemant Sorens plea against ED summons: பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) தனக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டது.
நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை ஏற்க மறுத்ததை அடுத்து சோரன் மனுவை வாபஸ் பெற்றார்.
திங்கள்கிழமை (செப்.18) மனுவை எடுத்துக் கொண்ட பெஞ்ச், அவர் ஏன் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தை அணுகவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்; இது அதிகார வரம்பிற்கு உள்பட்ட உயர் நீதிமன்றமாகும்” ஆகும்.
Approach High Court first: SC refuses to entertain Jharkhand CM Hemant Soren’s plea against ED summons
அப்போது, ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, “உயர் நீதிமன்றத்தை அணுகலாம்; ஆனால் இது தொடர்பான பிரச்னைகள் உச்ச நீதிமன்றம் முன் நிலுவையில் உள்ளன” என்றார்.
இதையடுத்து “நீங்கள் உயர் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் திரும்பப் பெற அனுமதிப்போம்” என்று நீதிபதி திரிவேதி கூறினார்.
தொடர்ந்து, “வழக்கை பொதுவாக உயர்நீதிமன்றத்தில் இருந்து தொடங்க வேண்டும்" என்று நீதிபதி போஸ் கூறினார். ரோஹத்கி இறுதியில் மனுவை வாபஸ் பெற ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரம் ராஞ்சியில் சட்டவிரோத சுரங்கம் மற்றும் நில மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக ED மேற்கொண்ட விசாரணை தொடர்பானது.
முன்னதாக, செப்டம்பர் 18ஆம் தேதி சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அது தொடர்பான மனு அதே நாளில் உச்ச நீதிமன்றத்தில் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால், செப்டம்பர் 23 அன்று ஆஜராகுமாறு அமலாக்கத்துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்பியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“