puducherry | Tamilisai Soundararajan | தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ஆட்சியா்களுக்கு வழங்கும் முடிவு உட்பட 5 திட்டங்களுக்கு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாணவா்களுக்கான மடிக்கணினி வழங்கும்போது, அதன்மேல் புதுவை மாநில அரசின் சின்னம் (லோகோ) ஒட்டப்படவும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ஆட்சியா்களுக்கு வழங்கவும், பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கான மானியம் வழங்குவதற்கும், மகளிா் மற்றும் ஊனமுற்றோா் மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் மேம்பாட்டுக் கழகத்துக்கான மானிய நிதி மற்றும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரங்களில் சிறுதானிய உணவுகள் வழங்குவதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
புதுவை அரசு அனுப்பிய 5 திட்டங்களின் கோப்புகளுக்கு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“