/tamil-ie/media/media_files/uploads/2019/01/a316.jpg)
Apsara reddy appointed as all india mahila congress general secretary - அகில இந்திய காங்கிரஸ் மகளிர் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம்!
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார்.
Welcoming Apsara Reddy to @MahilaCongress
As @sushmitadevmp puts it the path for inclusivity comes through acceptance and compassion beyond the set societal norms.#Womenpositivehttps://t.co/pG3AnmPc6J
— All India Mahila Congress (@MahilaCongress) 8 January 2019
பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர், நிகழ்ச்சி தொகுப்பாளார் என்ற பன்முகம் கொண்டவர் திருநங்கை அப்சரா ரெட்டி. முதன் முதலாக கடந்த 2016ல் பாஜகவில் இணைந்த அப்சரா, அதற்கு பிறகு அதே ஆண்டு அதிமுகவில் இணைந்து, செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்தார். தற்போது காங்கிரஸ் அவருக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி ஒன்றில் திருநங்கை நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.