2019 மக்களவை தேர்தலில் மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அப்போது ட்வீட் செய்த யோகேந்திர யாதவ், “பாரதிய ஜனதாவை தடுத்து நிறுத்த முடியாவிட்டால், காங்கிரஸ் மடிய வேண்டும். இந்திய வரலாற்றில் காங்கிரஸிற்கு சாதகமான பங்கு இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நான்கு நாள்கள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 2014ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றியை விட பாஜக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
தற்போது பல மாற்றங்களுக்கு இடையே யோகேந்திர யாதவ், 2022, செப்.8ஆம் தேதி ராகுல் காந்தியின் கன்னியாகுமரி- காஷ்மீர் ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்டார்.
முன்னதாக முகநூல் நேரலையில் பேசினார். அப்போது. “இங்கு காங்கிரஸின் கொடியை பார்ப்பீர்கள். ராகுல் காந்தியின் புகைப்படங்களை காண்பீர்கள். இந்த யாத்திரை தனி நபருக்கு சொந்தமான யாத்திரை அல்ல.
இது இந்திய குடியரசை மீட்டெடுப்பது பற்றியது. நாங்கள் அவர்களை அகற்றுவோம்” என்றார். யோகேந்திர யாதவ், இந்த பாத யாத்திரையில் இணைவதற்கு முன்பு சம்யுக்த் கிஷான் மோர்சா பொறுப்பில் இருந்து விலகினார்.
மத்திய அரசின் 3 பண்ணைச் சட்டங்களுக்கு எதிராக இந்த விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து அச்சட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் திரும்ப பெறப்பட்டது.
மேலும், யாதவ் லக்கிம்பூரி வன்முறையில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா தொண்டர் வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறினார். இதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தப்பட்டபோது மறுத்துவிட்டார்.
சோசலிச அரசியல் மற்றும் மரபுகளில் ஊறிப்போன யாதவ், 1962-1967 காலகட்டத்தில் ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய லோஹியைட் கிஷன் பட்நாயக்கைத் தனது அரசியல் குருவாகக் கருதுகிறார்.
இருவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சந்தித்தனர், அங்கு யாதவ் அரசியல் அறிவியலில் எம்.ஏ. பயின்றார். பின்னர், அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் M Phil கற்றார்.
தொடர்ந்து, 1985-1993 இல் உதவி பேராசிரியராக அங்கு கற்பித்தார். அதைத் தொடர்ந்து, அவர் வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தில் (CSDS) சேர்ந்தார், அங்கு அவர் 2009 வரை மூத்த சக ஊழியராகப் பணிபுரிந்தார் மற்றும் நாட்டின் முன்னணி பிசிபாலஜிஸ்ட்டாக முக்கியத்துவம் பெற்றார்.
நவம்பர் 2012 இல் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மியை நிறுவுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, யாதவ் முறைப்படி கெஜ்ரிவாலுடன் கைகோர்த்தார். யாதவின் இந்த நடவடிக்கை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அப்போதைய UPA அரசாங்கம் அவரை பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது.
2012 ஆம் ஆண்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து அரசியல் கார்ட்டூனை அகற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையால் யாதவ் என்சிஇஆர்டியின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆம் ஆத்மி கட்சியுடன் யாதவின் உறவு ஆரம்ப ஆண்டுகளில் சீராக இருந்தது. 2014 லோக்சபா தேர்தலில் குர்கான் தொகுதியில் போட்டியிட்ட அவர், டெபாசிட் கூட இழந்தார்.
அதன்பிறகு, ஆம் ஆத்மி கட்சிக்குள் விரிசல்கள் உருவாகத் தொடங்கின, ஆனால் 2015 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறும் வரை இத்தகைய பிளவுகள் பெரும்பாலும் மறைக்கப்பட்டிருந்தன.
டெல்லி தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியில் விரிசல்கள் ஏற்பட்டன. அப்போது வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மற்றும் யாதவ் ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகளை யாதவ் நிராகரித்தார், அவர் கொள்கை ரீதியான அரசியலின் பாதையில் இருந்து விலகியதாகக் குற்றம் சாட்டினார். பின்னர் அவர் ஸ்வராஜ் அபியானைத் தொடங்கினார், பின்னர் அதை ஸ்வராஜ் இந்தியா என்ற அரசியல் கட்சியாக மாற்றினார், இது 2017 டெல்லி நகராட்சித் தேர்தல் உட்பட தேர்தல்களிலும் போட்டியிட்டது.
ஸ்வராஜ் இந்தியா இதுவரை எந்த தேர்தல் வெற்றியையும் பெறவில்லை என்றாலும், யாதவ் தலைமையில் கட்சி பல்வேறு குறிப்பிடத்தக்க இயக்கங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது, குறிப்பாக விவசாய நெருக்கடி மற்றும் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளுக்காக போராடி வருகிறது.
மே 22, 2019 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு எழுதிய யாதவ், காங்கிரஸானது தேய்மானத்தால் "இறந்துவிடும்" என்று கூறினார். மேலும், “அது ஓரங்கட்டப்பட்டு, படிப்படியாக வாக்காளர்களிடம் உள்ள ஈர்ப்பை இழக்கிறது” எனவும் தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“