கேரளாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஓய்வுபெற்ற இராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களை கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் பெயர் கேப்ரியல் சேனா ஆகும். இந்த பெயர் பைபிளில் சொல்லப்பட்டுள்ள தேவதூதர் கேப்ரியலைக் குறிப்பதாகும்.கேப்ரியல் கடவுளின் தூதராகவும், ஏழு தேவதூதர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். 'கேப்ரியல் சேனா' என்ற இந்தக் அமைப்பு கூட்டத்தைக் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த மாதம், கண்ணூரில் தலசேரி ஆர்ச் டயோசிஸில்
தொடங்கப்பட்ட இந்த கேப்ரியல் சேனா, தனது முதல் கூட்டத்தை நவம்பர் 15 ஆம் தேதி கண்ணூர் மாவட்டம் தாலிபரம்பாவில் நடத்தவுள்ளது.
பாலியல் முறைகேடுகள் முதல் நில மோசடி என பல விஷயங்களில்,கேரளா பிஷப்புகளை அதன் விசுவாசிகள் கேள்வி கேட்கும் நேரத்தில் இந்த கேப்ரியல் சேனா துவங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில், நில மோசடியில் சிக்கியுள்ள கார்டினல் ஜார்ஜ் அலெஞ்சேரி பதவி விலக வேண்டும் என்று எர்ணாகுளம் ஆர்க்டயோசிஸ் சேர்ந்த விசுவாசிகளில் ஒரு பகுதியினர் கொச்சின் கார்டினல் வீட்டிற்கு அணிவகுத்துச் சென்றனர். கடந்த ஆண்டில் கூட , கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜலந்தர் மறைமாவட்டத்தின் பிஷப் பிராங்கோ முலாக்கல் கைது செய்யப்பட்டார். கன்னியாஸ்திரிகள் குழுவின் பயங்கர போராட்டத்திற்கு பிறகே, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்கள், விசுவாசத்தின் பாதுகாவலர்களாகவும், இலட்சியங்களின் வீரர்களாகவும் மாற வேண்டும், என்று கேப்ரியல் சேனா இயக்குனர் மேத்யூ ஆஷாரிபரம்பில் கூறினார்.
இதைப் பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் ,"நவம்பர் 15 ம் தேதி நடக்க விருக்கும் முதல் கூட்டத்தின் போது சுமார் 150 பேர் சேர்வார்கள்,பெரும்பாலும் அவர்களின் சேவைகள் கூட்டக் கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் , டிசம்பர் மாதம் கண்ணூரில் தேவாலயத்தால் ஏற்பாடு செய்துள்ள விவசாயிகள் பேரணியின் போது இந்த சேனாவின் உறுப்பினர்கள் முதல் முறையாக நிறுத்தப்படுவார்கள் " என்றும் கூறினார்.
இந்த கேப்ரியல் சேனாவிற்கு எந்த வகுப்புவாத சாயமும் இல்லை, எந்த கத்தோலிக்கரும் இதில் உறுப்பினராகலாம் என்றும் ஆஷாரிபரம்பில் கூறினார்.
இப்போது சேனாவில் உறுப்பினராக உள்ள முன்னாள் ராணுவ வீரரானஅலெக்சாண்டர் டி, தேவாலயத்திற்கு தனது சேவைகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். அவர் , "முன்னாள் படைவீரர்களின் திறன்களை வீணடிக்காமல் இது போன்ற ஆரோக்கிய சிந்தனைகளில் ஈடுபடுத்துவது நல்ல முயற்சி என்றும் பாராட்டினார் .
சேனாவுடன் தொடர்புடைய மற்றொரு முன்னாள் முன்னாள் ராணுவ வீரல் ஜார்ஜ் கே கூறுகையில், "நாங்கள் தேவாலயத்திற்குச் செல்வோர், ஏற்கனவே, அனைத்து முன்னாள் படைவீரர்களும் உறுப்பினர்களாக உள்ளஅமைப்பை நிர்வகித்து வருகிறோம். யாராவது எங்கள் சேவைகளை பொது நலத்திற்காக நாடினால், அது வரவேற்கத்தக்கது. ஆனால் சேனா ஒரு சங்கமாகவோ, அல்லது சித்தாந்த்தை பரப்பும் அமைப்பாக இருந்தால், நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம்" , என்றார்.
சாதாரண கிறிஸ்துவ மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாயின்ட் கிறிஸ்தவ கவுன்சில் அமைப்பின் செயலாளர் ஜார்ஜ் ஜோசப், இது குறித்து கூறுகையில், “தற்போதைய சூழ்நிலையில், தேவாலயங்கள் மேலாதிக்கத்துக்காகவும் , சொத்துக்களை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரத் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. சேனாவைப் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவது ஆபத்தான போக்காக கருதுகிறேன். மதகுருக்களை எதிர்க்கும் விசுவாசிகளை அச்சுறுத்துவதற்கு அவர்களின் சேவைகள் பயன்படுத்தப்படலாம்" என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில், ஆர்த்தடாக்ஸ் மற்றும் யாக்கோபைட் தேவாலயங்கள் ( கத்தோலிக்கரல்லாத பிரிவுகள்) மத்திய கேரளாவில் பல தேவாலயங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.