”2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு நீங்கள் தயாரா?”: பள்ளி மாணவனின் கேள்வியால் அசந்துபோன மோடி

"2019-ஆம் ஆண்டு நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வுக்கு தயாரா? அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்?”, என மாணவர் மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

“2019-ஆம் ஆண்டு நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வுக்கு தயாரா? அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்?”, என நாடாளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு மாணவர் ஒருவர் பிரதமர் நரேந்திரமோடியிடம் கேள்வி எழுப்பினார்.

தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக தன் ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் பிரதமர் மோடி, ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்த புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்து.

இந்நிலையில், டெல்லியில் பள்ளி மாணவர்களிடையே மோடி கலந்துரையாடினார். அப்போது, 11-ஆம் வகுப்பு மாணவர் கிரிஷ் சிங், “2019-ஆம் ஆண்டு நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வுக்கு தயாரா? அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்?”, என கேள்வி எழுப்பினார். அதற்கு கிரிஷ் சிங்குக்கு கேள்வி கேட்கும் திறன் இருப்பதால் இதழியலை தனது துறையாக தேர்ந்தெடுக்கலாம் என பிரதமர் கூறினார். மேலும், மாணவரின் கேள்விக்கு பதிலளித்த மோடி, “நாட்டின் 1.2 பில்லியன் மக்களும் எனக்கு துணையாக இருக்கின்றனர். அதனால், நான் தேர்வு குறித்து கவலைக்கொள்ள தேவையில்லை”, என கூறினார்.

அப்போது அந்த மாணவர் தான் மருத்துவராக வேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்தார்.

×Close
×Close