scorecardresearch

தமிழக ஆளுநர் விவகாரம் எதிரொலி? கேரள அரசின் உரையை அப்படியே வாசித்த ஆளுநர் ஆரிப் முகமது கான்

கேரள பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் ஆளுநர் கொள்கை உரை, ராஜ்பவனுக்கும் அரசுக்கும் இடையே நிலவும் மோதலை பிரதிபலிக்கவில்லை; மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஊடுருவல் கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பிற்கு நல்லதல்ல என்று ஆளுநர் உரை

தமிழக ஆளுநர் விவகாரம் எதிரொலி? கேரள அரசின் உரையை அப்படியே வாசித்த ஆளுநர் ஆரிப் முகமது கான்
கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான்

Shaju Philip

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைப் போல் அல்லாமல், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், திங்கள்கிழமை சட்டமன்றத்தில் தனது கொள்கை உரையில் மாநில அரசு தயாரித்த உரையை அப்படியே வாசித்தார். “மாநிலத்தின் கடன் வரம்புகளைக் குறைப்பதற்கும், மாநிலங்களின் சட்டமன்றக் களத்திற்குள் நுழைவதற்கும் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் வரம்புகளின் வரம்பிற்குள் வரவு-செலவுக் கடன்களைச் சேர்ப்பதற்குமான” மத்திய அரசாங்கத்தின் முயற்சிகளை ஆளுநர் விமர்சித்தார்.

பத்திரிக்கை சுதந்திரம் மீதான மாநில அரசாங்கத்தின் அக்கறையை ஆரிப் முகமது கான் எடுத்துரைத்தார், “பத்திரிகை சுதந்திரத்தை வெவ்வேறு வழிகளில் குறைக்கும் சில நிகழ்வுகள் நாட்டின் சில பகுதிகளில் இருந்து வருகின்றன” என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: எக்ஸ்பிரஸ் விசாரணை – பகுதி 1: கிராமப்புற ஏழைகளுக்கான பிரதம மந்திரி வீடு; ஆனால் மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?

பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் கொள்கை உரை, ராஜ்பவனுக்கும் அரசுக்கும் இடையே, முக்கியமாக உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் நிலவும் மோதலை பிரதிபலிக்கவில்லை. கேரளாவில் உள்ள பல்கலைகழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை பதவி நீக்கம் செய்ய சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ராஜ்பவனில் நிலுவையில் உள்ள நிலையில், அரசின் கவலையை கவர்னர் வாசித்தார். “சட்டமன்றத்தின் நோக்கம் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்ற அரசியலமைப்பு மதிப்பிற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

ஆரிப் முகமது கான் தனது உரையில், “ஒரு வலிமையான தேசம் ஒரு வலுவான மத்திய அரசு, அதிகாரம் பெற்ற மாநிலங்கள் மற்றும் தீவிரமாக செயல்படும் உள்ளாட்சி அரசாங்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். தேசத்தின் அமைப்பு வலுவாக இருக்க, அதற்கு வலுவான உறுப்புகள் தேவை. சமூகத் துறைகளில் மாநிலங்களுக்கு பெரும் பொறுப்புகள் உள்ளன மற்றும் அவற்றின் நிதி நிலை வலுவாக இருக்க வேண்டும். மாநிலங்களின் கடன் வரம்புகளைக் குறைப்பதற்கான சமீபத்திய நடவடிக்கைகள் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் அவற்றின் தலையீடுகளின் நோக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. நிதி ஒழுக்கம் சரியான ஆர்வத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்றாலும், மாநில அரசுகளுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்க முடியாது, அவை மத்திய அரசுக்குப் பொருந்தாது,” என்று கூறினார்.

மாநிலங்களின் சட்டமன்றக் களத்தில் ஊடுருவல் கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பிற்கு நல்லதல்ல என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார். “நமது ஜனநாயக அரசியலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அமைப்பில் உள்ள சரிபார்ப்பு மற்றும் சமநிலைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். பத்திரிகை சுதந்திரம் என்பது ஒவ்வொரு வலுவான ஜனநாயக சமூகத்தின் முக்கிய அம்சமாகும். பத்திரிக்கை சுதந்திரத்தை வெவ்வேறு வழிகளில் குறைக்கும் சில சம்பவங்கள் நாட்டின் சில பகுதிகளில் இருந்து வருகின்றன. சட்டங்களுக்கு இணங்குவது தொடர்பான விஷயங்களை விசாரிக்க அதிகாரம் பெற்ற ஏஜென்சிகள், அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தொழில்முறையிலிருந்து விலகிச் செல்லும் வகையில் செயல்படுகின்றன என்ற ஒரு கருத்தும் இங்கு அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும்,” என்று ஆளுநர் கூறினார்.

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தால் (KIIFB) பெறப்பட்ட கடன்களை மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் வரம்புக்குள் சேர்க்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் முடிவை விமர்சித்த ஆரிப் முகமது கான், “இது அரசாங்கத்தின் வளர்ச்சி முன்னுரிமைகளை மேலும் மேம்படுத்துவதற்கான நிதி இடத்தைக் குறைக்கும் மற்றும் மாநிலத்தின் வளங்களை கட்டுப்படுத்தும். இத்தருணத்தில், நாட்டின் நிதிக் கூட்டாட்சி முறை குறித்த கேள்விக்கு, மத்திய அரசு மிகவும் சாதகமான முறையில் தீர்வு காணும் என நம்புகிறேன்’’ என்று கூறினார்.

”சமூக நலன் மற்றும் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்துவதற்கு மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்கு, அர்த்தமுள்ள கூட்டுறவு கூட்டாட்சியை வளர்க்கும் மத்திய அரசின் நேர்மறையான அணுகுமுறை எங்களுக்குத் தேவை,” என்று ஆரிப் முகமது கான் கூறினார்.

சில்வர்லைன் அரை அதிவேக ரயில் திட்டத்தை கேரள அரசு கைவிடவில்லை என்றும் கொள்கை உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கனவு திட்டத்தை” நிறைவேற்றுவதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது, மேலும் விரிவான திட்ட அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது என்று ஆளுநர் கூறினார். பொதுமக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு, திட்ட சீரமைப்பை சரிசெய்வதற்கான கணக்கெடுப்பை மாநில அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன், தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியது, அப்போது, ​​சட்டசபையில் ஆர்.என்.ரவி வாசித்த தயார் செய்யப்பட்ட உரையில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் விளைவாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, தமிழில் அச்சிடப்பட்ட அசல் உரையை மட்டும் பதிவு செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Arif mohammed khan kerala government speech

Best of Express