குஜராத்த்தை சாப்ட்வேர் இன்ஜினியரான பவேஷ் ஷா, 2018ல் தனது மனைவி தாராவுடன் பெர்லினுக்கு குடிபெயர்ந்தார். இந்த தம்பதிக்கு அரிஹா என்ற பெண் குழந்தை 2021 ஆம் ஆண்டு பிறந்தார். அரிஹாவின் பெற்றோர்கள் குழந்தையை துன்புறுத்தியதாக ஜெர்மன் அதிகாரிகள் குற்றம் சாட்டிய நிலையில், 7 மாத குழந்தை செப்டம்பர் 23, 2021 முதல் வளர்ப்புப் பராமரிப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், பெர்லினில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
தற்போது குழந்தை அரிஹாவுக்கு 2 1/4 வயதாகிட்டது ( 28 மாதம்). இந்த வழக்கை விசாரித்து வரும் பாங்கோவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஜூன் 13 தேதியிட்ட இரண்டு தீர்ப்புகளில் அரிஹா ஷாவை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்துள்ளது. மேலும் ஜெர்மன் இளைஞர் சேவையான ஜுஜென்டாமிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழந்தையை நேரடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பான இந்திய நல சேவையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தாரா மற்றும் பவேஷ் ஷா மனு தாக்கல் செய்த நிலையில், 'குழந்தையை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் பெற்றோருக்கு இனி இல்லை' என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூன் 3 அன்று, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ஜெர்மன் அதிகாரிகளை "அரிஹாவை இந்தியாவிற்கு விரைவில் அனுப்ப தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார். முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 59 எம்.பி.க்கள், இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மனுக்கு கூட்டாக கடிதம் எழுதி, அரிஹாவைத் தாயகம் திரும்பச் செய்ய முடிந்த அனைத்தையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
பெர்லினின் மத்திய இளைஞர் நல அலுவலகம் அரிஹாவின் தற்காலிக பாதுகாவலராக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இருக்கும் இடத்தை நீதிமன்றம் தான் தீர்மானிக்கும் என்று கூறினர். பெற்றோர் முதலில் அரிஹாவின் கோர நாடினர். ஆனால் அந்த கோரிக்கையை திரும்பப் பெற்றனர். பின்னர் அவர்கள் குழந்தையை இந்திய நல சேவைகளுக்கு வழங்குமாறும், பெற்றோரின் பாதுகாப்பை முழுமையாக மீட்டெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர் அகமதாபாத்தில் உள்ள அசோக் ஜெயின் நடத்தும் வளர்ப்பு இல்லத்திற்கு மாற்றப்படுவார் என்ற புரிதலுடன், குழந்தையுடன் மீண்டும் இந்தியா செல்ல பெற்றோரும் திட்டமிட்டனர்.
அரிஹாவின் பெற்றோர் அல்லது இந்திய நலச் சேவைகள் பாதுகாப்பில் வைக்க மறுத்த போது, நீதிமன்றம் குழந்தைக்கு ஏற்பட்ட இரண்டு காயங்களை சுட்டிக்காட்டியது. ஏப்ரல் 2021ல் தலை மற்றும் முதுகு பகுதியில் குழந்தை குளித்தபோது காயம் ஏற்பட்டது. இதேபோல், செப்டம்பர் 2021ல் குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டது. அதனை குறிப்பிட்ட நீதிமன்றம், "குழந்தைக்கு இருக்கும் ஆபத்தைத் தவிர்க்க" பெற்றோரின் கவனிப்பு மறுக்கப்பட வேண்டும். "தாய் அல்லது தந்தை வேண்டுமென்றே குழந்தையின் பிறப்புறுப்புக் காயங்களை ஏற்படுத்தியிருந்தார்கள்" மற்றும் பெற்றோர்களால் "கேள்விக்குரிய நிகழ்வுகளை போதுமான அளவு சீரான முறையில் விளக்க முடியவில்லை" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
"ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது செவ்வாய்க் கிழமைகளில் 60 நிமிடங்களுக்கு குழந்தையுடன் தொடர்பு கொள்வதற்கு" பெற்றோருக்கு ஒரு மாதத்திற்கு இரண்டு முறை "உரிமை மற்றும் கடமை" ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்றும் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வருகை குறித்த அவர்களின் மனுவில், ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் தலா 90 நிமிடங்களுக்கு தங்கள் மகளுடன் நேரத்தை செலவிட கோரியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது அவசியம் என்றும், அதனால் அரிஹா தனது வளர்ச்சியில் தனது பெற்றோரின் நிலையான படத்தை உருவாக்க முடியும் என்றும் கூறியது. அதேவேளையில், "ஒரு பிணைப்பின் வளர்ச்சி இனி இல்லை. குழந்தையின் அனுபவத்தில் கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தாத வகையில்" தொடர்பு அதிர்வெண்ணை மாற்றக்கூடாது என்றும் அது குறிப்பிட்டது. வருகையின் அதிர்வெண் அல்லது கால இடைவெளியில் ஏதேனும் மாற்றம் அரிஹாவில் "ஒரு குழப்பமான விளைவை" ஏற்படுத்தக்கூடும் என்றும், குழந்தை தனது வளர்ப்பு பெற்றோருடன் பிணைக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு குறிப்பிட்டது.
தீர்ப்பிற்குப் பிறகு, அரிஹாவின் பெற்றோர் ஜூன் 15 அன்று பெர்லினில் இருந்து டெல்லிக்கு வந்து, அவர் ஒரு இந்தியக் குடிமகள் என்பதால் குழந்தையை திருப்பி அனுப்புமாறு இந்திய அரசிடம் முறையிட்டனர். "ஜெர்மனியில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆனால் நியாயமான விசாரணை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. இப்படி ஒரு தீர்ப்பை எதிர்பார்த்தோம். எங்களைப் பாதுகாத்த நிபுணர்களின் அறிக்கைகள் குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை. ஒருதலைப்பட்சமான தீர்ப்பை வழங்கினர்,” என்கிறார் பாவேஷ்.
அரிஹாவை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தம்பதியினர் வெளியுறவுத்துறையை அணுகியுள்ளனர். அரிஹாவுக்கு 3 வயது ஆனவுடன் ஜுஜென்டாம்ட் தொடருமா அல்லது வருகையை அனுமதிப்பாரா என்பது தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறினர். “நாங்கள் வருகையை இழந்தவுடன், நாங்கள் குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வர விரும்பினால், அரிஹா தானே நம்மை நினைவில் கொள்ளாமல் இருக்கலாம் அல்லது இந்தியா என்றால் என்னவென்று புரிந்து கொள்ளாமல் போகலாம் மற்றும் திரும்பி வர மறுக்கலாம். அரிஹா தனது புதிய வளர்ப்பு பெற்றோருடன் குடியேறும் வரை இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள வருகை பொருந்தும்." என்று தாரா கூறினார்.
ஜூன் 8 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய பாவேஷ், “அக்டோபர் 2021 முதல் அரிஹாவுடனான எங்கள் வருகைகள் ஒரு சமூக சேவகர் மூலம் கண்காணிக்கப்பட்டன. சமூக சேவகர்களிடமிருந்து நாங்கள் தொடர்ந்து நல்ல அறிக்கைகளைப் பெற்றோம். செப்டம்பர் 2022 நிலவரப்படி, வருகைகள் சிறப்பாக நடைபெறுவதையும் அவை அதிகரிக்கப்படலாம் என்பதையும் சமூக சேவகர் கவனித்தார். அந்த அறிக்கைகளை நம்பி, செப்டம்பர் 2022ல், நாங்கள் குடும்ப நீதிமன்றத்திற்குச் சென்றோம், எங்கள் வருகைகளின் எண்ணிக்கை வாரத்திற்கு இரண்டு முறையாவது அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரினோம், ஆனால் ஜுஜெண்டாம்ட் மனுவை நிகரித்தார்.
இறுதியில், நீதிபதி, நடுநிலையை எடுத்துக் கொண்டு, இருமாதத்திற்கு ஒருமுறை - முதல் மற்றும் மூன்றாவது செவ்வாய்க் கிழமைகளில் - தலா ஒரு மணிநேரம் பார்வை நேரமாக வழங்கினார். எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவு குறித்து ஜுஜெண்டாம்ட் சமூக சேவையாளருக்கு தெரிவிக்கவில்லை என்றும், இந்த அறிவுறுத்தல்கள் இல்லாமல், சமூக சேவகர் எங்கள் வருகைகளை மாற்ற முடியாது என்றும் அறிந்தோம். இந்திய தூதரகத்திடம் பேச ஆரம்பித்தோம். இறுதியாக, தூதரகத்திற்கும் ஜுஜெண்டாம்ட்டுக்கும் இடையிலான தொடர்புக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி இருமாதமுறை வருகைகள் டிசம்பர் 2022ல் செயல்படுத்தப்பட்டன." என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.