அக்னிபாத் திட்டத்தில் ராணுவ ஆட்சேர்ப்புக்கான சாத்தியமான மாற்றங்களை ஆயுதப்படைகள் ஆலோசித்து வருகின்றன, இதில் தற்போதுள்ள 25 சதவீத அக்னிவீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் சதவீதத்தில் மாற்றங்கள் மற்றும் அவர்களின் பயிற்சி கால அதிகரிப்பு ஆகியவை அடங்கும்.
சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மூன்று சேவைகளின் பின்னூட்ட கருத்துக்கள், அக்னிபாத் திட்டத்தில் உள்ள சில சிக்கல்களை சுட்டிகாட்டியதை அடுத்து, இந்த மாற்றங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸூக்கு தெரியவந்துள்ளது.
இந்த மாற்றங்கள், இன்னும் அரசாங்கத்திற்கு முறையான பரிந்துரைகளாக வைக்கப்படவில்லை. இவை இன்னும் ஆயுதப் படைகளால் விவாதிக்கப்படும் முன்மொழிவுகளாக உள்ளன.
ராணுவத்தில் விவாதிக்கப்படும் அக்னிபாத் திட்டத்தின் மாற்றங்களில் ஒன்று, வழக்கமான துருப்புக்களுக்கான தக்கவைப்பு சதவீதத்தை தற்போதைய 25 சதவீதத்திலிருந்து 60-70 சதவீதமாகவும், சிறப்புப் படைகள் உட்பட தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ வீரர்களுக்கான தக்கவைப்பு கிட்டத்தட்ட 75 சதவீதமாகவும் அதிகரிக்கிறது.
ராணுவத்தால் தொகுக்கப்பட்ட கருத்துக்கள், அக்னிவீரர்களிடையே ஒற்றுமை மற்றும் நட்புறவு இல்லாமை மற்றும் போட்டியிடும் போக்கு மற்றும் ஒத்துழைக்காமல், உள்வாங்கப்படுவதை சுட்டிக்காட்டுகிறது, இது அக்னிவீரர்களிடையே நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கிறது.
"இது ஆயுதப் படைகளில் விரும்பத்தக்க தரம் அல்ல, தக்கவைப்பு சதவீதத்தை அதிகரிப்பது அதை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது" என்று ஒரு அதிகாரி கூறினார், மற்ற சேவைகளில் குறைந்தபட்சம் 50 சதவீத அக்னிவீரர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
போட்டியை விட பிணைப்பு மற்றும் ஒருவரையொருவர் கொண்டு செல்லும் விருப்பத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம் என்று அந்த அதிகாரி கூறினார். "அமைப்பின் பெரிய ஆர்வம், நல்ல தோழமை மற்றும் படைப்பிரிவு மனப்பான்மை கொண்ட வீரர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்று அந்த அதிகாரி கூறினார்.
ராணுவத்தில், அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன் ராணுவ வீரர்களுக்கான பயிற்சி காலம் 37 முதல் 42 வாரங்கள் வரை இருந்தது.
அக்னிவீரர்களுக்கான இந்த பயிற்சி காலத்தை 24 வாரங்களாகக் குறைப்பது அவர்களின் ஒட்டுமொத்த பயிற்சியை மோசமாக பாதித்துள்ளது என்று ராணுவம் பெற்ற கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
அக்னிவீரர்களுக்கான பயிற்சிக் காலத்தை, முதலில் ராணுவ வீரர்களுக்கு இருந்ததை விட அதிகரிக்க ராணுவம் ஆலோசித்து வருகிறது, அதே நேரத்தில் மொத்த சேவைக் காலத்தை தற்போதைய நான்கு ஆண்டுகளில் இருந்து ஏழு ஆண்டுகளாக உயர்த்த ஆலோசனை நடைபெற்று வருகிறது, இதன் மூலம் அக்னிவீரர்களுக்கு பணிக்கொடை மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்க்கான (ESM) அந்தஸ்து வழங்க முடியும்.
இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால், அக்னிவீரர்கள் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பொருந்தக்கூடிய பலன்களுக்கு தகுதியுடையவர்களாக மாறுவார்கள் மற்றும் அக்னிவீரர்கள் சேவையின் ஏழு வருடங்கள், முழுவதுமாக படையில் நிரந்தரமாக தக்கவைக்கப்படுபவர்களுக்கான ஓய்வூதிய சேவையின் ஒரு பகுதியாக கணக்கிடப்படும்.
மற்ற பரிந்துரைகளில் பட்டதாரிகளை தொழில்நுட்ப பணியாளர்களாக பணியமர்த்துதல் அடங்கும்.
"தொழில்நுட்ப-தீவிர சேவைகளுக்கு அதிக மூத்த தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை, அதேநேரம் அவர்களை பணியமர்த்துவதற்கான ஒரே வழியான அக்னிபாத், மூத்த தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கையை வழங்குவதில் குறைவு ஏற்படலாம்" என்று ஒரு அதிகாரி கூறினார், இதனால் 2035ல் பல மூத்த தொழில்நுட்ப பணியிடங்கள் காலியாகிவிடும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
மத்திய ஆயுதக் காவல் படைகளில் பணியமர்த்தப்படும் அக்னிவீரர்களின் மூப்புத்தன்மையைப் பாதுகாப்பது, துணை ராணுவப் படைகளில் புதிதாகத் தொடங்குவதற்குப் பதிலாக, சில பட்டதாரி அக்னிவீரர்கள் இறுதியில் பாதுகாப்புக் குடிமக்களின் குழுவை உருவாக்குவது ஆகியவை விவாதிக்கப்படும் பரிந்துரைகளில் அடங்கும்.
ராணுவத்தின் பல்வேறு கட்டளைகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள், அக்னிவீரர்களின் உடல் தரநிலைகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு இருப்பதையும், அவர்கள் படிக்கவும் அதிக தொழில்நுட்ப வரம்பைக் கொண்டிருக்கவும் தயாராக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
எவ்வாறாயினும், அவர்களின் கவனம் ஒட்டுமொத்த பயிற்சிக்கு பதிலாக தக்கவைப்பு சோதனைகளில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு நகர்ப்புறங்களில் இருந்து அதிகளவான விண்ணப்பதாரர்கள் வருவதும் தெரியவந்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ராணுவ ஆட்சேர்ப்பில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஜூன் 2022 இல் அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்டது, இந்தத் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு ராணுவப் படைகளுக்கு வீரர்கள், விமானப் பணியாளர்கள் மற்றும் மாலுமிகளை ஆட்சேர்ப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டது.
நான்கு ஆண்டு பதவிக்காலத்தின் முடிவில், அவர்களில் 25% பேர் தகுதி மற்றும் நிறுவனத் தேவைகளுக்கு உட்பட்டு, வழக்கமான அடிப்படையில் சேவைகளில் சேர தானாக முன்வந்து விண்ணப்பிக்கலாம்.
வழக்கமான சேவையில் பணியமர்த்தப்பட்ட ராணுவ வீரருக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், முன்னாள் ராணுவ வீரர் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெறுவார், அதே சமயம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 25% இல் இல்லாத அக்னிவீரருக்கு இந்த உரிமை இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.