கோடையில் எல்லை தகராறு அதிகரித்த பின்னர் நேபாளத்திற்கு முதல் உயர் மட்ட இந்திய அதிகாரி பயணம் செய்கிறார். இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே அடுத்த மாதம் காத்மாண்டுக்கு செல்கிறார்.
இ-டிக்கெட் மோசடியை கண்டறிந்த ஆர்.பி.எஃப்: உதவியாளரை தேடும் வேட்டை துரிதம்
தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நேபாள ராணுவம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்திய ராணுவத் தலைவர் “இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நேபாளத்திற்கு வருவார்” என்று தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 3 ம் தேதி இந்த பயணம் "நேபாள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் "இரு நாடுகளிலும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் அது ஒத்திவைக்கப்பட்டது".
தேதிகளை தீர்மானிக்க இரு தரப்பினரும் தொடர்பில் இருப்பதாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் சந்தோஷ் பெளடெல் தெரிவித்தார்.
நாட்டின் புதிய வரைபடத்தில் கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றை மாற்றி, ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய வரைபடம் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு முறிவுக்கு வழிவகுத்தது.
ஆனால் சமீபத்திய மாதங்களில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஓலி இடையேயான தொலைபேசி உரையாடலில் இருந்து தொடங்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சனம் ஷெட்டியை காப்பாற்றிய பிக் பாஸின் ராஜதந்திரம் – விமர்சனம்
இதைத் தொடர்ந்து காத்மாண்டுவில் அதிகாரிகள் இடையே இந்திய அரசு நிதியளித்த திட்டங்களை மறுஆய்வு செய்தது. இந்த சந்திப்பு ஆகஸ்ட் 17-ம் தேதி காத்மாண்டுவில் நடந்தது. அங்கு நேபாள வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் பைராகி அதிகாரிகள் குழுவை வழிநடத்தினார். இந்தியத் தரப்பில் இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா வழிநடத்தினார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”