‘உலக வரைபடத்தில் இருக்குமா என பாகிஸ்தான் சிந்திக்க நேரிடும்... இந்தியாவின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம்’ - ராணுவ தளபதி எச்சரிக்கை

ராஜஸ்தான் எல்லையோரப் பகுதிகளுக்கு வருகை தந்த ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, அடுத்த முறை, ‘ஆபரேஷன் சிந்தூர்’ போது இந்தியா காட்டிய நிதானத்தைக் கடைப்பிடிக்காது என்று கூறினார்.

ராஜஸ்தான் எல்லையோரப் பகுதிகளுக்கு வருகை தந்த ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, அடுத்த முறை, ‘ஆபரேஷன் சிந்தூர்’ போது இந்தியா காட்டிய நிதானத்தைக் கடைப்பிடிக்காது என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
upendra dwivedi ani

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, வியாழக்கிழமை விஜயதசமி பண்டிகையையொட்டி, புஜில் 'சாஸ்திர பூஜை' செய்தார். Photograph: (Photo: @SpokespersonMoDX/ANI)

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வெள்ளிக்கிழமை பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். மற்றொரு மோதல் ஏற்பட்டால், "ஆபரேஷன் சிந்தூர் 1.0" போது இந்தியா காட்டிய நிதானத்தைக் கடைப்பிடிக்காது என்று கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

ராஜஸ்தானின் எல்லையோரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, ஜெனரல் திவேதி வீரர்களை விழிப்புடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு வலியுறுத்தினார்.

ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உரையாற்றிய தளபதி, இந்தியாவின் பொறுமையைச் சோதிப்பதைத் தவிர்க்குமாறு பாகிஸ்தானை எச்சரித்ததுடன், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை நிறுத்தவும் வலியுறுத்தினார். “அடுத்த முறை, ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன் போது இந்தியா காட்டிய நிதானத்தை இந்தியா கடைப்பிடிக்காது. எடுக்கப்படும் நடவடிக்கை, உலக வரைபடத்தில் தொடர்ந்து இருக்குமா என்று பாகிஸ்தான் சிந்திக்க வேண்டிய நிலையை உருவாக்கும்” என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்குள் இருந்த பயங்கரவாதத் தளங்களைத் தாக்கிய ஆபரேஷன் சிந்தூர், நாட்டின் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

Advertisment
Advertisements

“இங்கு நடக்கும் சண்டை வெறும் ராணுவத்தின் சண்டை மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த தேசத்தின் சண்டை ஆகும். சிந்தூர் 1.0-ன் படிப்பினைகள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவரின் உறுதியையும் வலுப்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதை மேற்கோள் காட்டி, “ஒரு பெண் தன் நெற்றியில் குங்குமம் வைக்கும் போதெல்லாம், எல்லையில் இருக்கும் வீரரை நினைவில் கொள்கிறாள். அந்த பிணைப்பு புனிதமானது” என்று அவர் மேலும் கூறினார்.

ஆபரேஷன் சிந்தூரின் போது குறிவைக்கப்பட்ட இலக்குகள் குறித்துப் பேசிய அவர், “எந்த அப்பாவி உயிர்களும் பலியாகவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்தோம். பயங்கரவாதப் பதுங்குமிடங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் அவற்றின் தலைவர்களை மட்டுமே நாங்கள் குறிவைத்தோம்” என்றார்.

அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களுக்கான ஆதாரங்களை இந்தியா உலகிற்கு முன்வைத்தது என்றும் ஜெனரல் திவேதி கூறினார். “இந்தியா ஆதாரங்களைக் காட்டாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் அதை மறைத்திருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு விழாவில், ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பான பங்காற்றியமைக்காக பி.எஸ்.எஃப். 140-வது பட்டாலியன் கமாண்டன்ட் பிரபாகர் சிங், ராஜ்புதானா ரைபிள்ஸ் மேஜர் ரிதேஷ் குமார் மற்றும் ஹவில்தார் மோஹித் கெரா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

காஜுவாலாவில் உள்ள வீரர்களிடம் உரையாற்றிய ராணுவ தளபதி, இந்தப் பகுதி உடனான தனது தனிப்பட்ட தொடர்பை நினைவு கூர்ந்ததுடன், படைகளின் தயார்நிலையைப் பாராட்டினார். “நான் 1984-ல் நியமிக்கப்பட்டு 1985-ல் என் பிரிவில் சேர்ந்தபோது, நான் அழைத்துச் செல்லப்பட்ட முதல் இடம் காஜுவாலா தான். நான் ராணுவத்தில் வளர்ந்து, இங்கு விரிவாகப் பணியாற்றினேன். கிட்டத்தட்ட 5 முதல் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களைச் சந்திக்கவும், நிலைமைகள் எவ்வாறு மாறிவிட்டன என்பதைப் புரிந்துகொள்ளவும் இங்கு திரும்பி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் கூறினார்.

தனது பயணத்தை நிறைவு செய்த ஜெனரல் திவேதி, படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்துத் திருப்தி தெரிவித்தார். மேலும், வீரர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையுடன் சேவை செய்யுமாறு வலியுறுத்தினார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: