Manipur: மணிப்பூரின் பெரும்பான்மை மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த ஆதிக்கவாதக் குழு, இம்பாலில் பணியாற்றிய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கியது. இந்த சம்பம் நடந்த 10 நாட்களுக்குப் பிறகு, தௌபால் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை காலை அவரது இல்லத்தில் இருந்து கடத்தப்பட்டார்.
கடத்தப்பட்ட அதிகாரி தௌபால் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் வசிப்பவர். அவர் தற்போது விடுமுறையில் இருந்ததாகவும், வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து வாகனத்தில் கடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடத்தலுக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
அந்த ராணுவ அதிகாரியை மீட்பதற்காக அனைத்து பாதுகாப்புப் படையினரும் தற்போது ஒருங்கிணைந்த தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தேசிய நெடுஞ்சாலை 102-ல் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 27 அன்று இம்பால் மேற்கு மூத்த காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் அமித் சிங்கின் வீட்டை 200 பேர் சூழ்ந்துகொண்டு சூறையாடினர். பிறகு, துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர். இதைத் தடுப்பதற்காகக் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த மோதலில் பொதுமக்கள் இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் பல்வேறு பள்ளத்தாக்கு மாவட்டங்களின் நிர்வாகங்களை மத்திய துணை ராணுவப் படைகளையும், சட்டம் ஒழுங்கு நிலைமையில் காவல்துறைக்கு உதவ ராணுவத்திடம் கோரியது.
மணிப்பூர் ஐ.ஜி.பி ஐ.கே முய்வாவும் இதுபோன்ற சம்பவங்கள் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மத்தியப் படைகள் இருப்பது அவசியமாகும் என்றும் எச்சரித்திருந்தார். அங்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் 'தொந்தரவு செய்யப்பட்ட பகுதிகள்' அறிவிப்பு மலை மாவட்டங்களைப் போல் பொருந்தாது.
மணிப்பூரில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இதுவரை குறைந்தது 212 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“