படைவீரர்களின் ரேஷனில் பாரம்பரிய சிறுதானியங்களை அறிமுகப்படுத்த ராணுவம் முடிவு

ஐ.நா பொதுச் சபை 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், வடக்கு எல்லைகள் உட்பட பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களுக்கு ரேஷனில் சிறு தானியங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.

international year of millets, IE news, news today, delhi news, army ration, படை வீரர்களின் ரேஷன்களில் பாரம்பரிய சிறுதானியங்களைஅறிமுகப்படுத்த ராணுவம் முடிவு - Army to introduce native, traditional millets in troop rations
சிறுதானியங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், வடக்கு எல்லைகள் உட்பட பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களுக்கு ரேஷனில் சிறு தானியங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.

“கோதுமை மாவுக்கு ஆதரவாக இவை (1966-ல்) நிறுத்தப்பட்டபோது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக துருப்புக்ளுக்கு உள்நாட்டு பாரம்பரிய தானியங்கள் வழங்கப்படுவது உறுதி செய்வது ஒரு மைல்கல் முடிவு என்று ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அனைத்து தரநிலை வீரர்களுக்கான தினசரி உணவில் ஒருங்கிணைந்த பகுதியாக இப்போது சிறுதானியங்கள் இருக்கும் என்று ராணுவம் கூறியுள்ளது.

சிறு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு சுகாதார நன்மைகளை நிரூபித்துள்ளது என்றும் இந்திய புவியியல் மற்றும் காலநிலை நிலைமைகளுக்கு ஏற்றது என்றும், இதனால் வாழ்க்கை முறை நோய்களைக் குறைப்பதற்கும், துருப்புக்களின் திருப்தியையும் மன உறுதியையும் மேம்படுத்துவதற்கும் இது ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று ராணுவம் கூறியுள்ளது. புரதம், மைக்ரோ ஊட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் நல்ல ஆதாரமாக சிறுதானியங்கள் உள்ளது. இதனால், ஒரு ராணுவ வீரரின் உணவின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது” என்று ராணுவம் கூறியுள்ளது.

கலோரிகள் மதிப்பைத் தீர்மானிக்க முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ராணுவ துருப்புக்களுக்கான ரேஷன்களின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ராணுவத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள படையினருக்கு தேவையான உணவு மற்றும் அவர்கள் ஒரு சீரான உணவு பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

“கடினமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களின் கலோரி குறைபாடுகளை ஈடுசெய்ய அதிக உயரத்தில் அல்லது அதிக உயரமுள்ள பகுதிகளில் பணியாற்றும் துருப்புக்களுக்கு சிறப்பு ரேஷன்கள் வழங்கப்படுகின்றன” என்று ஒரு அதிகாரி கூறினார்.

அடுத்த நிதியாண்டு முதல் ராணுவ வீரர்களுக்கான ரேஷனில் தானியங்கள் – அரிசி மற்றும் கோதுமை மாவில் – 25 சதவீதத்திற்கு மிகாமல் சிறுதானிய மாவை கொள்முதல் செய்ய ராணுவம் அரசாங்கத்தின் அனுமதியை கோரியுள்ளது.

ரேஷனில் சிறுதானியங்களின் பங்கை தீர்மானிக்க ஆய்வு

அடுத்த நிதியாண்டு முதல் ராணுவ வீரர்களுக்கான ரேஷனில் தானியங்கள் – அரிசி மற்றும் கோதுமை மாவில் – 25 சதவீதத்திற்கு மிகாமல் சிறுதானிய மாவை கொள்முதல் செய்ய ராணுவம் அரசாங்கத்தின் அனுமதியை கோரியுள்ளது. அதிக உயரமான அல்லது பிற கடினமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களின் கலோரி தேவைகளின் அடிப்படையில் ரேஷனில் சிறுதானியங்களின் சதவீதத்தை சரிசெய்வதற்கு ஒரு புதிய ஆய்வு நடத்தப்படும் என்று தெரிகிறது.

மூன்று பிரபலமான சிறுதானிய மாவு – கம்பு, சோளம், ராகி ஆகியவை – துருப்புக்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும். துருப்புக்கள் பயன்படுத்தும் விருப்பங்கள் மற்றும் அவர்கள் கோரும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் துருப்புக்களுக்கு வழங்கப்படும் தானியங்கள் அவர்கள் விரும்புவதைப் பொறுத்து இருக்கும் என்று மற்றொரு அதிகாரி கூறினார். “உதாரணமாக, வட இந்தியாவில் இருந்து துருப்புக்கள் விரும்பும் கோதுமைக்கு மாறாக, தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவிலிருந்து வரும் துருப்புக்கள் அரிசியை விரும்புகின்றனர்” என்று அந்த அதிகாரி கூறினார்.

கூடுதலாக, பாரகானாஸ் (ரானுவ சிறப்பு நிகழ்ச்சிகள்) மற்றும் கேன்டீன்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடுகளில் சிறுதானியங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய ராணுவம் கட்டளைகள் முழுவதும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

ராணுவம், சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகளைத் தயாரிப்பதற்காக சமையல்காரர்களுக்கு மையப்படுத்தப்பட்ட பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும், வடக்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளை அறிமுகப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

ராணுவத்தின் கருத்துப்படி, சிறுதானிய உணவுகள் சி.எஸ்.டி கேன்டீன்கள் மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வணிக வளாகங்களில் பிரத்யேக மையங்கள் அமைக்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் ‘உங்கள் சிறுதானியங்களை அறிவோம்’ விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தப்பட்டு வருகிறது.

ராணுவ அதிகாரி கூறுகையில், சிறுதானியங்கள் அடிப்படையில் ஒரு உள்நாட்டு தானியமாக இருந்தாலும், ஒரு புதிய ஆய்வு, துருப்புக்களின் கலோரி தேவைகளின் அடிப்படையில் அதிக உயரம் அல்லது பிற கடினமான இடங்களில் இருக்கும் சதவீதத்தை சரிசெய்ய உதவும் என்று கூறினார்.

சிறுதானியங்களின் நுகர்வை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இதை இயக்குகிறது. சர்வதேச சிறுதானிய ஆண்டைக் குறிக்கும் வகையில் அனைத்து மத்திய அமைச்சகங்களும், துறைகளும் தங்களது நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கி சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Army to introduce native traditional millets in troop rations

Exit mobile version