அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரை இயக்கிய விமானிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டலா மலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. தற்போது தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று வியாழக்கிழமை அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டலா மலைகள் அருகே விழுந்து நொறுங்கியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டரை இயக்கிய விமானிகளைத் தேடும் பணி தொடங்கியுள்ளது.
போம்டிலா அருகே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், காலை 9.15 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடனான (ஏடிசி) தொடர்பை இழந்தது, என்று லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறினார்.
ராணுவ ஹெலிகாப்டர் போம்டிலாவுக்கு மேற்கே மண்டலா அருகே விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு தேடுதல் குழு அனுப்பப்பட்டுள்ளது” என்என்று மகேந்திர ராவத் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"