ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்; 2 பேர் கைது

‘ரிபப்ளிக்’ டிவி சீஃப் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி தனது மனைவியுடன் காரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது புதன்கிழமை இரவு பைக்கில் வந்த 2 நபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது....

‘ரிபப்ளிக்’ டிவி சீஃப் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி தனது மனைவியுடன் காரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது புதன்கிழமை இரவு பைக்கில் வந்த 2 நபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்களை அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாவலர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதலில் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி சாமியா கோஸ்வாமி இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக அர்னாப் கோஸ்வாமி போலீஸில் அளித்த புகாரில், “நாங்கள் கண்பத்ராவ் கதம் மார்க்கை அடைந்தபோது இரவு 12.15 மணி அளவில், எங்கள் காரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 ஆண்கள் முந்திச் செல்ல முயன்றனர். அந்த இரண்டு தாக்குதல்காரர்களும் முதலில் ஓட்டுநரைப் பார்த்து கையை நீட்டி தடுத்து நிறுத்தினர்.

பின்னர், பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த நபர், கார் டிரைவரின் வலது பக்க ஜன்னலை தாக்கினார். அதன் பிறகு கார் ஜன்னல் மூடப்பட்டதை உணர்ந்த அந்த நபர் அதை உடைக்க முடியாததால் உடனடியாக ஒரு திரவ பாட்டிலை அவருடைய பாக்கெட்டில் இருந்து எடுத்து, கார் முழுவதும் வீசினார். அப்போது நான் டிரைவர் பக்கம் அமர்ந்திருந்தேன்.” என்று அர்னாப் கோஸ்வாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த புகாரில், அந்த 2 நபரும் தாக்குதல் நடத்தும் சைகைகளுடன் இந்தியில் கூச்சலில் திட்டியதாக தெரிவித்துள்ளார். அப்போது, அவர் தனது தலையை ஸ்டீயரிங் மீது முட்டிக்கொண்டதாகவும் பின்னர் முன்னால் செல்லும் சாலயைப் பார்த்து அவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தி இடது பக்கமாக காரை திருப்பினார். சுதாரித்துக்கொண்டு கார் மீண்டும் சாலையில் சென்றபோது, அர்னாப் கோஸ்வாமி கார் கண்ணாடியில் பார்த்தபோது, அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் மும்பை போலீஸும் அவரது தனிப்பட்ட பாதுகாவலர்களும் அந்த 2 நபர்களையும் பிடித்துவிட்டதைப் பார்த்தார்.


கண்பத்ராவ் கதம் மார்க்கில் ஒரு இடத்தில் சிலர் கூட்டமாக சேர்ந்து வருவதை என்.எம். ஜோஷி மார்க் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரோந்துப் போலீசார் கவனித்தனர். “நாங்கள் அவர்களிடம் சென்று விசாரித்தபோது, இருவரும் கோஸ்வாமியைத் தாக்கியதாக அறிந்தோம்” என்று ஒரு அதிகாரி கூறினார். பின்னர், அவர்கள் தங்கள் ஆதரவாளர்களை அழைத்தனர். பின்னர், அவர்கள் இருவரும் என்.எம். ஜோஷி மார்க் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையடுத்து போலீஸார், அர்னாப் கோஸ்வாமியின் புகாரின் பேரில் 341 (தவறான கட்டுப்பாடு), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 34 (உள்நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அருண் போரடே மற்றும் பிரதீக் மிஸ்ரா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அவர்கள் இருவரும் சியோனில் உள்ள இளைஞர் காங்கிரஸ் பிரிவுடன் இணைந்திருப்பதாக அறிகிறோம். நாங்கள் அதை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம். அவர்கள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற முயற்சிக்கிறோம்.” என்று கூறினார்.

அர்னாப் கோஸ்வாமி, ரிபப்ளிக் டிவி சீஃப் எடிட்டர்

அர்னாப் கோஸ்வாமி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் பற்றி தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சட்டீஸ்கர் பிரிவு, ரிபப்ளிக் டிவி சேனலின் நிறுவனரும் சீஃப் எடிட்டருமான அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக முறையான புகார் அளித்தது. அந்த புகாரில், அர்னாப் கோஸ்வாமி வேண்டுமென்றே அவதூறான அறிக்கைகளை வெளியிட்டார் என்றும் தனது நிகழ்ச்சியில் சோனியா காந்திக்கு எதிராக அவதூறான மொழியைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.


மகாராஷ்டிரா மாநில இளைஞர் காங்கிரஸ் (ஒய்.சி) தலைவர் சத்யஜீத் தம்பே, கோஸ்வாமிக்கு எதிராக சங்கம்னரில் புகார் அளித்ததாகவும், அனைத்து மாவட்டங்களிலும் புகார் அளிக்க இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார். நாக்பூரில், மாநில மின்சாரத்துறை அமைச்சர் நிதின் ரவுட்டின் மகனும் இளைஞர் காங்கிரஸ் அலுவலக குணால், இதேபோன்ற ஒரு புகாரை பதிவு செய்தார்.

அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் குறித்து பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “அர்னாப் கோஸ்வாமியைத் தாக்கும் முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம். எந்தவொரு பத்திரிகையாளர் மீதும் நடத்தப்படும் அனைத்து தாக்குதலையும் நாங்கள் கண்டிக்கிறோம். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. சகிப்புத்தன்மையைப் போதிப்பவர்கள் மிகவும் சகிப்புத்தன்மையற்றவர்களாக மாறிவிட்டார்கள் என்பது உண்மையில் முரணாக இருக்கிறது. எனவே, இந்த தாக்குதல் முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close