/tamil-ie/media/media_files/uploads/2018/10/1-16.jpg)
பிரம்மோஸ் ஏவுகணை
பிரம்மோஸ் ஏவுகணை ரகசியத்தை கைமாற்றியதாக, ஏவுகணை குழுவில் 4 வருடங்களாக பணியாற்றி வந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.உளவாளி இந்திய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரம்மோஸ் ஏவுகணை :
பிரம்மோஸ் ஏவுகணை உலகில் வேகமாக செல்லக்கூடியது ஆகும். இந்தியா - ரஷ்யாவின் கூட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்ட இந்த ஏவுகணை நீர்மூழ்கி கப்பல், விமானம் மற்றும் நிலத்தில் இருந்து கூட செலுத்தி இலக்கை அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது.
இந்நிலையில், இந்த ரவுகணை குறித்த ரகசியங்கள் பாக். மற்றும் அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதாக இந்திய உளவுத்துறை எச்சரித்து வந்தது. இதுக் குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய இந்திய பாதுகாப்பு படையினர் நேற்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் இன்ஜீனியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 4 ஆண்டுகளாக பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.உளவாளி செயல்பட்டு வந்தது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக பிரம்மோஸ் பிரிவில் அவர் பணியாற்றி வந்துள்ளார் அவரது பெயர் நிஷாந்த் அகர்வால்.
அகர்வாலை உத்தரபிரதேச ஏடிஎஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுத்தர அளவிலான சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றிய தகவலை அவர் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ ய சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரம்மோஸ் ஏரோபேஸ் தளம் தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த ஐடிகளுடன் அவர் ஷாட்டிங் செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.