கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்புக்கு உதவியதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன் 40 வயது மதிக்கத்தக்க பழ வியாபாரி கைது செய்யப்பட்டார். அவர் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க நிகழ்வுகள், பற்றி தகவல் சேகரித்ததாக என்.ஐ. ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொல்லம் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் பற்றிய விவரங்களும் சேகரித்ததாக என்.ஐ.ஏ கூறியுள்ளது.
ஜனவரி 17-ம் தேதி, கொல்லம் மாவட்டத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மண்ணெழத்துதாரா என்ற பகுதியைச் சேர்ந்த முகமது சாதிக் என்பவரை கைது செய்தனர். 2 குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் தங்கியிருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் தற்போது சட்டப்பூர்வ காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெற என்.ஐ.ஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.எப்.ஐ ‘ரிப்போர்ட்டர்கள்’
என்.ஐ.ஏ கூறுகையில், “விசாரணையின் போது பி.எப்.ஐ அமைப்பு பல உள்ளூர்வாசிகளை பயங்கரவாதிகளாக மாற்றி வருவதாக கண்டறியப்பட்டது. பி.எப்.ஐ அவர்களுக்கு தகவல் சேகரிக்கும் வேலையை ஒதுக்குகிறது. அப்படி வேலை கொடுக்கப்பட்டவர்களை பி.எப்.ஐ ” ரிப்போர்ட்டர்கள்” என்று அழைப்பதாக கூறப்படுகிறது”.
“தற்போது கைது செய்யப்பட்டுள்ள சாதிக் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். அவர் 2012-ம் ஆண்டு சில பி.எப்.ஐ உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் அவரை சதி செயல் செய்யத் தூண்டி அவரை அமைப்பில் சேர்த்துள்ளனர்.
பழ வியாபாரியாக பணிபுரிந்த அவர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவின் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும்படி அவர்கள் அவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அவரிடம் ஆர்எஸ்எஸ் நிகழ்வுகளின் துண்டுப்பிரசுரங்கள், விருந்தினர்கள் பட்டியல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறினர்.
சதி செயல்
என்.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “பல்வேறு மதங்கள் மற்றும் குழுக்களிடையே பகையை உருவாக்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபட சதி செய்தததாக கேரளாவில் உள்ள என்.ஐ.ஏ, அதன் அலுவலக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் துணை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளில் ஈடுபடத் செய்தல். லஷ்கர்-இ-தொய்பா, இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியா (ISIS)/Daesh மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தல். வன்முறை ஜிஹாதின் ஒரு பகுதியாக பயங்கரவாத செயல்களைச் செய்து இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பி.எப்.ஐ சாதிக்கிற்கு ‘ரிப்போர்ட்டர்’ என்று குறிப்பிடப்படும் வேலையை ஒதுக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘ஹிட் ஸ்க்வாட்’ மூலம் திட்டமிட்ட இலக்குக்காக ரிப்போர்ட்டர் என்று அழைக்கப்படம் நபர்கள் மற்ற சமூகங்களின் தலைவர்களைப் பற்றிய விவரங்களை சேகரிக்கிறார்கள். சோதனையின் போது, கைது செய்யப்பட்ட சாதிக்கின் வீட்டிலிருந்து டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பல குற்றவியல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/