Advertisment

கண்ணீருடன் வழியனுப்பி வைத்த குடும்பத்தினர்! முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லி உடல் தகனம்

Arun Jaitley Funeral Latest News Updates : அரசு மரியாதையுடன் அவருடைய இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arun Jaitley Funeral Live Updates

Arun Jaitley Funeral Live Updates

Arun Jaitley News Updates: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66. முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisment

அருண் ஜெட்லி, பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியில் நாடாளுமன்றத்தில் பாஜக.வின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இயங்கியவர்கள் அருண் ஜெட்லியும், சுஷ்மா சுவராஜும்தான். துரதிருஷ்டம், சுஷ்மா மரணம் அடைந்த ஓரிரு நாளிலேயே அருண் ஜெட்லியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்தது.

ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அருண் ஜெட்லி, உடல் நிலை அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் மருத்துவமனை சென்று பார்த்தனர்.

இந்தச் சூழலில் நேற்று அருண் ஜெட்லியின் உயிர் பிரிந்தது. முன்னாள் மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கின்றன. அரசியலைத் தவிர்த்து, டெல்லி கிரிக்கெட் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் பதவிகள் வகித்தவர் அருண் ஜெட்லி. கட்சி பேதங்களை கடந்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Live Blog

Arun Jaitley Death News Updates:

அருண் ஜெட்லி மரணம், தலைவர்கள் இரங்கல், உடல் அடக்கம் உள்ளிட்ட தகவல்கள் உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் பதிவு செய்யப்படுகின்றன. தகவல்களுக்கு இணைந்திருங்கள்.

 














Highlights

    17:00 (IST)25 Aug 2019

    விடை பெற்றார் அருண் ஜெட்லி

    விடை பெற்றார் அருண் ஜெட்லி! டெல்லியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து எக்ஸ்க்ளூசிவ் வீடியோ

    (எக்ஸ்பிரஸ் வீடியோ - பிரேம் நாத் பாண்டே)

    16:52 (IST)25 Aug 2019

    தந்தையை வழியனுப்பிய மகன்

    அருண் ஜெட்லி உடல் தகனம் செய்யப்பட்ட நிகழ்வில்... அவரது மனைவி மற்றும் மகன்.

    publive-image

    15:46 (IST)25 Aug 2019

    அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது

    மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    publive-image

    14:34 (IST)25 Aug 2019

    டில்லி நிகம்பூத் காட் பகுதியில் அருண் ஜெட்லி உடல் தகனம்

    மறைந்த அருண் ஜெட்லியின் உடல் தகனம், டில்லி நிகம்பூத் காட் பகுதியில் நடைபெற்றது. இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், எம்.பி.க்கள் கவுதம் காம்பீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.publive-image 

    13:38 (IST)25 Aug 2019

    அருண்ஜெட்லி மறைவு – இமாச்சலபிரதேச அரசு 2 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

    பா.ஜ. மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லியின் மறைவையடுத்து, இமாச்சல பிரதேச மாநிலம் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

    13:11 (IST)25 Aug 2019

    அருண்ஜெட்லி உடலுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி

    டில்லி பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஹர்ஷவர்தன், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    12:27 (IST)25 Aug 2019

    அருண்ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு – துணை முதல்வர் பன்னீர்செல்வம்

    அருண்ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த அருண் ஜெட்லியின் உடலுக்கு தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின் பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது, அருண்ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு ஆகும். நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்றியவர் அருண்ஜெட்லி .  அருண்ஜெட்லி குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.

    11:48 (IST)25 Aug 2019

    அருண் ஜெட்லி உடலுக்கு அமித் ஷா அஞ்சலி

    டில்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடலுக்கு அமித் ஷா உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

    10:41 (IST)25 Aug 2019

    பா.ஜ., கட்சி தலைமையகத்தில் அருண் ஜெட்லி உடல்

    மறைந்த அருண் ஜெட்லியின் உடல், டில்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதிமரியாதை செலுத்தப்பட்ட பின் உடல் தகனம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    10:12 (IST)25 Aug 2019

    அருண் ஜெட்லி உடலுக்கு சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் அஞ்சலி

    மறைந்த அருண் ஜெட்லியின் உடலுக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அஜித் சிங், பிரபுல் படேல், திமுக எம்.பி. ஆ.ராசா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    publive-imagepublive-imagepublive-imagepublive-imagepublive-image

    express photo by prem nath pandey

    09:39 (IST)25 Aug 2019

    அருண் ஜெட்லி உடலுக்கு பிரிட்டிஷ் ஹைகமிஷனர் அஞ்சலி

    அருண் ஜெட்லியின் உடலுக்கு பிரிட்டிஷ் ஹைகமிஷனர் சர் டோமினிக் அஸ்குயித் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது, அருண் ஜெட்லி, பிரிட்டிஷ் - இந்திய நட்புறவுக்கு பெரிதும் பாடுபட்டவர். சிறந்த மனிதர். கடுமையான உழைப்பாளி. பிரிட்டிஷார் பெரும்பாலானோரின் நன்மதிப்பை பெற்றவர். அவரின் மறைவு எங்களை பெரிதும் பாதித்துள்ளதாக அவர் கூறினார்.

    09:19 (IST)25 Aug 2019

    அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலத்தில் மோடி பங்கேற்கவில்லை

    நேற்று மதியம் உயிரிழந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்றிருக்கும் அவர் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தான் நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    09:02 (IST)25 Aug 2019

    Arun Jaitley Passed away : டெல்லி விரைந்த தமிழக தலைவர்கள்

    தமிழக தலைவர்கள் அருண் ஜெட்லியின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள டெல்லி செல்கின்றனர். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் இன்று பிற்பகல் நடைபெறும் அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர்.

    17:54 (IST)24 Aug 2019

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் அஞ்சலி

    மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஆகியோர் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வீட்டிற்கு வருகை தந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    publive-image

    publive-image

    publive-image

    (Express Photos by Praveen Khanna)

    17:42 (IST)24 Aug 2019

    அருண் ஜெட்லியின் இறுதிச் சடங்கில் ஓ.பி.எஸ்

    அருண் ஜெட்லியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர்.

    17:12 (IST)24 Aug 2019

    ராம்நாத் கோவிந்த் நேரில் அஞ்சலி

    மறைந்த அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் அஞ்சலி. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    16:47 (IST)24 Aug 2019

    அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன் - விஜயகாந்த்

    "முன்னாள் மத்தியஅமைச்சர் திரு.அருண்ஜெட்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் இன்று (24.08.19) காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், பாஜகவினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்" என தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

    முன்னாள் மத்தியஅமைச்சர் திரு.அருண்ஜெட்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் இன்று (24.08.19) காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். 

    அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், பாஜகவினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் pic.twitter.com/nGqnTjQ3BE

    — Vijayakant (@iVijayakant) August 24, 2019

    16:34 (IST)24 Aug 2019

    உறவினர்கள் அஞ்சலி

    டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள இல்லத்தில், அருண் ஜெட்லியின் உடல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

    15:38 (IST)24 Aug 2019

    மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு

    அருண் ஜெட்லியின் உடல் இன்று மாலை டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 2 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து நிகம்போத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    15:10 (IST)24 Aug 2019

    அருண் ஜெட்லியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அருண் ஜெட்லி அவர்கள் திடீரென மறைவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜனநாயக தீபத்தை போற்றிப் பாதுகாக்கும் “ஜெ.பி” என்று இன்றளவும் அழைக்கப்படும் 'மக்கள் தலைவர்' ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் போராட்டத்தில் முன்னணியில் நின்று கைதாகி - நெருக்கடி நிலை காலத்தில் ஏறக்குறைய 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்த அருண் ஜெட்லி அவர்கள் ஒரு ஜனநாயகவாதி மட்டுமல்ல - நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    14:48 (IST)24 Aug 2019

    கடும் போக்குவரத்து நெரிசலில் டெல்லி எய்ம்ஸ் சாலை

    மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று மதியம் 12:07 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.  இதனால், டெல்லி எய்ம்ஸ் சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. 

    publive-image

    14:43 (IST)24 Aug 2019

    வெறிச்சோடி காணப்படும் அருண் ஜெட்லி இல்லம்

    அருண் ஜெட்லி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்று மாலை நான்கு மணிக்கு அவரது உடல் டெல்லியில் உள்ளது அவரது வீட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. 

    publive-image

    14:35 (IST)24 Aug 2019

    முதல்வர் பழனிசாமி இரங்கல்

    'நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியவர். கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும், அன்பாக பழகக் கூடிய பண்பாளர்' என அருண் ஜெட்லி மரணம் குறித்து முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

    14:26 (IST)24 Aug 2019

    தனிப்பட்ட முறையில் பேரிழப்பு - அமித் ஷா

    'அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது; அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    13:48 (IST)24 Aug 2019

    அருண் ஜெட்லி மரணம்: குடியரசுத் தலைவர் இரங்கல்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியில், ‘நீண்ட உடல் நலிவுடன் போராடிய அருண் ஜெட்லியின் மரணம் மிகுந்த கவலை தருகிறது. ஒரு மதிநுட்பமான வழக்கறிஞர், உரிய காலங்களில் சிறந்த பார்லிமெண்டேரியன், சிறப்பான அமைச்சர், இந்த தேச உருவாக்கத்தில் சிறந்த பங்களிப்பு வழங்கியவர். அவரது மரணம் பொது வாழ்விலும், அறிவு ஜீவிகள் சூழலிலும் வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. அவரது குடும்பத்திற்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் இரங்கல்கள்’ என டிவிட்டரில் கூறியிருக்கிறார் ராம்நாத் கோவிந்த்.

    13:27 (IST)24 Aug 2019

    இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்

    பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை ட்விட்டரில் வெளியிட்டார். அதில், ‘அருண் ஜெட்லி, ஒரு அரசியல் ஜாம்பவான். உயர்ந்த அறிவு ஜீவி மற்றும் சட்ட நிபுணர். இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்த தலைவர். அவரது மறைவு கவலை அளிக்கிறது.

    அவரது மனைவி சங்கீதா ஜி, மகன் ரோகன் ஆகியோரிடம் பேசி இரங்கலை தெரிவித்தேன். ஓம் ஷாந்தி’ என கூறியிருக்கிறார் மோடி.

    13:13 (IST)24 Aug 2019

    தலைவர்கள் அஞ்சலி

    வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றவர் அருண் ஜெட்லி. மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர் இன்று பகல் 12.07 மணிக்கு மரணம் அடைந்தார். தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    Former Finance Minister Arun Jaitley Passes Away Updates: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அருண் ஜெட்லி, உடல் நிலை அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் மருத்துவமனை சென்று பார்த்தனர்.

    இந்தச் சூழலில் இன்று பகல் 12.07 மணிக்கு அருண் ஜெட்லியின் உயிர் பிரிந்தது. இரு வாரங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார் அவர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், காப்பாற்ற முடியவில்லை. இன்று அவருடைய இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.

    Arun Jaitley Bjp
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment