அருண் ஜெட்லி மீண்டும் நிதி அமைச்சராக இன்று பொறுப்பேற்கிறார். 65 வயதான அருண் ஜெட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதிற்காக தன் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். அவருக்கு பதிலாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிதித்துறை அமைச்சராக பதவி பதவி வகித்து வந்தார்.
அருண் ஜெட்லி அவர்களின் உடல்நலக் குறைவு
ஜெட்லி வெகு நாட்களாக சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த காரணத்தால் ஏப்ரல் மாதத்தில் இருந்து அலுவலகம் வர இயலவில்லை. மே மாதம் 14ம் தேதி அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அவரின் உடல்நிலை மெல்ல மெல்ல தேறி வந்த நிலையில் சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்படத் தொடங்கினார். பல்வேறு விவகாரங்கள் குறித்து எழுதி வந்தார். குறிப்பாக அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு, ஜி.எஸ்.டி, நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் அவரின் மறைவு பற்றி எழுதினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இடையில் நடந்த மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்க ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பாராளுமன்றத்திற்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடியின் கீழ் அமைக்கப்பட்ட அமைச்சகத்தில் 2014ம் ஆண்டு நிதி அமைச்சராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.